Tag Archives: அண்ணா

இந்து இட்லரிசம்! – (திராவிடநாடு – 29.03.1942)

இந்து இட்லரிசம்!

 

பரதா! இதோபார், நீ இனிமேல் இந்திரன், வருணன், வாயு அக்கினி, முலிய தேவாதிகள் இல்லை என்று கூறிக்கொணடிராதே என்று ஒரு நாள் நக்கீரன் கூறினார். இந்த வெடிகுண்டு வீச்சு என்னைத் தூக்கி வாரிப்போட்டுவிட்டது. நமது தோழர்களிலே நான் எத்தனையோ வகையானவர்களைக் கண்டிருக்கிறேன். அபிப்பிராயங்கள் அந்தர்பல்டி அடிக்கடிக் கண்டிருக்கிறேன். நமது தோழர்களிலே, நிழலைக்க்ணடு மிருளுவோர், நெருப்புடன் விளையாடுவோர், நேர் வழி மறந்து நிந்தனையால் சிந்தனையைச் சித்தரிப்போர்கூட உண்டு. ஆனால் நக்கீரன் இங்ஙனம், தேவாதிகளுக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டு பேச முன்வருவார் என்ற எதிர்பார்க்வேயில்லை. நான் கேட்டேன, என்ன நக்கீரரே! புத்தம்பிதிதாகப் பேசுகிறீர். புதுமை எது கட்டீர்? தோவிதிகளின் திருக்கடாட்சம் எவ்விதத்தால், எப்போது தங்கட்குக் கிடைத்தது?

தயவு கிடைத்ததாகவோ, தயவுகிடைக்கவேண்டுமென்று எதிர்ப்பார்த்தோ, நானா பரதா! பேசுபவன் என்று நக்கீரன் அறையவே அங்ஙனமிருக்க அக்னி முதலான தேவர்கள் சார்பாகத் தாங்கள் பேசக் காரணமென்ன? என்று மீண்டும் கேட்டேன்.

கேள் இதைப் பரதா! இந்திரன் முதலான தேவர்கள் நந்தமிழ் மக்களில் பெரும்பாலானவர்களிடம் தோழமையுடன் இருக்கக் கண்டேன். நமது தோழர்களின் ஆடையைக் கண்டீரன்றோ, ஆயிரம் பொத்தல், கண்ணாயிரமுடைய இந்திரனின் கடாட்சமன்றோ அது! ஏழைமக்களின் வயிற்றிலே, சதா, மூண்டிருக்கும் பசித்தீயை என்னென்று கூறுவது, அது அக்னியின் அன்புப் பெருக்கன்றோ! பெரும்பாரான பஞ்சை மக்களின் உணவு, காற்றுத் தானே பரதா! வாயுவின் வாஞ்சனையல்லவா அது! தரித்திரத்தில் புரளும் மக்களின் கண்களைக் கண்டிருப்பீர், வருணன் பிரத்யட்சமல்லவா! இதுபோல், அந்தத் தேவாதிகள் காட்சிதருவதால்தான், நான் அந்தத் தேவாதிகளைக் குறைகூறாதீர் என்றுரைத்தேன் என்று முடித்தார் நக்கீரன்.

நான் அவரது நகைச்சுவை பொருந்திய பேச்சைக்கண்டு சிரித்தேன். அவர் கூறினது, முன்னாளில், கவிகாளமேகம் பாடிய ஓர் பாடலின் சாசயல்கொண்டது. இத்தகைய வேடிக்கைக்குத் தேவாதிகளின் கதை பயன்படுகிறதேயல்லாமல், சுவைக்கு உதவுகிறதா! இவ்வளவு ரட்சகர்களை ஏட்டில் எழுதிவைத்துக்கொண்டு, கஷ்டத்திலேயே புரளும் மக்கள் இங்கிருப்பதுபோல் வேறெங்கும் கிடையாது என்னலாம். அற்புதக் கதைகளைக் காதுகுடையும் அளவுக்குக் கூறிட புராணீகர்கள் எவ்வளவு, இந்நாட்டில் வாழ்க்கையில் குடைச்சலோடு வதையும் மக்கள் எத்தனை கோடிபேர்! எவ்வளவு மகேஸ்வரர்ககளை, இந்துமதம், நம்முன்னால் கொண்டுவந்து நிறுத்துகிறது, எவ்வளவு விமரிசையான விழாக்கள் நடத்திவைக்கிறது, விதவிதமான ஆராதனைகள் செய்யத் தூண்டுகிறது, இருந்துமென்ன, இருதயவலியில்லாத மக்கள் எங்கே இருக்கிறார்கள்? பாதிக்குதே பசி என்றுரைத்தால் செய்த பாபத்தைக் காரணம் காட்டுவார் . . . வேறென்ன நடக்கிறது, கூறுங்கள் யோசித்து! அந்தக் குருடன், இந்த முடவன், அதோகிடந்து இருமும் நோயாளி, துடிக்கும் கிழம், துவண்டுபோகும் குழந்தை, தோல் பொம்மையான மாது, தொப்பென வீழ்ந்து மாயும் பஞ்சை, மாடிபக்கும் வண்டியை, மண்டையை முட்டுக்கொடுததுத் தள்ளும் பாட்டாளி, மார் வெடிக்கத் தன் மக்கள் துடிப்பரே என்றெண்ணி மனம் வெடிக்க மூட்டை தூக்கிக் கட்டைவெட்டி கக்கூஸ் கழுவி, கால்கை பிடித்து வாழும் கூலிக்வட்டம் – இந்த உருவங்களின் புலம்பலுக்கு, கேள்விகளுக்கு, குமுறலுக்கு, எங்கே ஐயா, பதில் கிடைக்கிறது! எங்கே ஆறுதல்! அவனைவன் செய்த வினையை அவனவன் அனுபவிக்கிறான் என்றும் என்றெழுதியதை அழித்தா எழுதமுடியும் என்றுங்கூறுவதைத் தவிர வேறு பேச்சுக் கிளம்பிற்றா!

வினை, எழுத்து, விதி, சோதனை இவைகள் தூளாயின தெரியுமோ, சம்மட்டியும் அரிவாளும் ஆளம் சஷியநாட்டிலே, அன்று எழுதியதை லெனின் அழித்து எழுதிக்காட்னார். அவதியுற்றோரை வாழச்செய்தார். அருள் மொழியால் அல்ல, தேவாலயஞ் சுற்றியல்ல, தமது தீரத்தால் வீரத்தால், நெஞ்சுறுதியால்!!

பாதிக்குதே பசி என்றுரைபோரும், அது உன் பாபம் என்று பதிலுரைப்போரும் அங்கு இல்லை! மத ஓடத்திலேறிய மாந்தரே பலி பீடத்தில் சாய்ந்தீரே! ஆம்! வைதீக வீடத்துக்கு நீங்கள் இங்கு பலியானீர்கள்! வாழ்வெனுங் கடலைக் கடக்க மதமெனம் ஓடமேறினீர். பார்ப்பனியமெனும் சண்டமாருதம், அந்த ஓடத்தை, வைதீகம் எனும் பாறைமீது மோதச்செய்தது, இந்தப் பலிபீடத்திலே சாய்ந்தீர்; இரத்தந் தோய்ந்த அந்தப் பலிபீடத்தை மனக்கண் படைத்தோர் காண முடியும்!

அந்தப் பலிபீடத்திலே சாய்ந்தவரின் தொகை கணக்கினில் அடங்காது!

அந்தக் கடலைக் கடந்தாக வேண்டுமென்பதற்காக மத ஓடமேறியவர்கள் பலிபீடத்திலே சாய்ந்தனர். வேறுசிலர, ஓடத்தில் ஏறாது, கடலை நீந்திக்கடக்கத் துணிந்து, சுறாவுக்கும், சுழல் அலைக்கம், விஷப்பூச்கிளுக்கும் இரையாவதுபோல், களவு, கொலை, கடுந்தொழில், ஆகிய காரியங்கள் செய்தேனும் பிழைப்போம் என்று ஆரம்பித்து, தண்னையும் நிந்தனையும் பெற்றுத் தலைசாய்ந்தனர். இத்தகைய பல எண்ணங்களை, என் மனத்திலே எழுப்பின, நக்கீரனின் பேச்சு, இந்து மார்க்கத்தில் கிடந்துழலும் மக்களக்கு ளீமார்க்கம் கிடைக்கவேண்டும்.

சர், ஸ்டார்போர்டு கிரிப்சோ, மிஸ்டர் சரிச்சிலோ, தாமாக மனமுவந்தோ, நம் நாட்டுத் தலைவர்களின் கூட்டு எச்சரிக்கையைக் கேட்ட பிறகோ, இந்தியாவை, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியப் பிடியிலிருந்தும், பிணைப்பிலிருந்துங்கூட விடுவித்துவிடலாம்.

ஐரோப்பியாவில் அதிவேகமாகப் பரவிவிட்ட ஹிட்லரிசத்தை, ஜனநாயகக் கோட்பாடுடைய நாட்டுப் படைகள், ஜெர்மனியிலிருந்தே விரட்டிவிடமுடியும்.

ஹிந்து ஹிட்லரிசத்தை, பார்பனிய பாசீசத்தை, ஆரிய ஏகாதிபத்தியத்தை, சர்.கிரிப்சாலும், இந்நாட்டிலிருந்து தொலைக்க முடியாது, ரூஸ்வெல்ட்டாலும் இயலாது.

அட்லாண்டிக் சாசனத்தினால், ஆரிய ஆதிக்கம் அகற்றப்பட வழி ஏற்படாத, ஹிந்து ஹிட்லரிசத்தை, இந்நாட்டுடப் பழம்பெருங்குடி மக்களாகிய நாம் முனைந்தால்தான் முறியடிக்க முடியும்.

ஹிந்து ஹிட்லரிசத்துக்கு வீட்டுக்கு வீடு, ஐந்தாம் படை இருக்கும். தகப்பனாரோ, தயாயாரோ, தாய் மாமனோ, ஹிந்து ஹிட்லரிசத்தின் ஏஜண்டாக இருந்துகொண்டு, அந்த ஹிட்லரிசத்தை எதிர்க்கம் தோழரகளைத் தொலைத்துவிடவும் தயாராக இருப்பர். நட்டுக் உண்மையான விடுதலை வேண்டுமென்றால், இந்த ஹிந்து ஹிட்லரிசத்திலிருந்து நாம் தப்பவேண்டும்.
ஹிட்லரிசம் சாந்தம் சமாதானம் சுபீட்சம் என்று பேசிக்கொண்டே சமரிலும், சதியிலும் சித்திரவதையிலும் இரண்டறக்கலப்பதுபோம், ஹிந்து ஹிட்லரிசம், பக்தி, பரமன், அருள் என்றுரைக்கம் ஆனால், உள்நோக்கம், அடிமைத்தனத்தைப் பெரும்பாலான மக்கள் மீது சுமத்தவேண்டும் என்பதுதான். ஹிந்து ஹிட்லரிசத்தால், உள்நாட்டில் குழப்பம், பிளவு, பேதம், அன்று தொட்டு இன்றவரை இருக்கிறது. ஒரு குலம், ம்ற்ற குலத்தை, மங்கி மடியச் செய்கிறது.
உழைப்பிலே செக்க மாடுகள், உணர்ச்சியிலே செம்மறியாடுகள், என்று கூறத்தக்க விதத்தில் தமிழர உருமாறிப்போனது, ஹிந்து ஹிட்லரிசத்துக்கு அடிபறிந்த காரணத்தாலேதான்.

புரி என இருந்தோர் இன்று பலர் முயலென வாழ்கின்றனர். வெகுசிலர் ஆமைபோல், (தீரத்தை) தலையை நீட்டுவதும், ஆளரவங்கேட்டதும் உள்ளுக்கு இழுத்துக் கொள்வதுமான உள்ளனர். ஹிந்து ஹிட்லரிசத்தால், ஒரு குலம், உழைக்கவேண்டிய அவசியமற்று, பிறரின் உழைப்பை உறிஞ்சும் கூடடமாகிவிட்டது. இதனால், அக்குலத்துக்கும் மற்றைய குலத்துக்கும் பகைமை மூண்டது. சிற்சில நேரங்களில் கவரை தென்படுகிறது. பிறசமயத்தில் கனல் வீசுகிறது, மூடபக்தி எனும் மூடுபனியால், சில சமயம் இந்தப்பகைமை, நீறுபூத்த நெருப்பெனக் காணப்படுகிறது. ஆனால், தீப்பொறிகள் திக்கெங்கும் கிளம்பிவிட்டன. தீயணைக்கம் படையின் திறமை நெடு நாள்களுக்க உபபோகமாகாது.

இத்தகைய ஹிட்லரிசத்தை, வெறுத்துக் கண்டித்து வேரறக் களைய வேண்டிய முழுப்பொறுப்பு, தமிழருடையது. முஸ்லீம்கள், அதன் முடிவணங்க மறுத்து மூலப்போருளைச் சேவிக்க இந்த சால வித்தைகள் ஏதுக்கு? என்று கூறிவிட்டனர். அவர்களை, ஹிந்து ஹிட்லரிசம், மதத்துறையில் ஏதும் செய்யமுடியாது. அஃதேபோல் கிறிஸ்தவர்களிடமும், இந்து ஹிட்லரிசம் நடவாது. மதத்துறையில் இஸ்லாமிய கிறிஸ்தவத் தோழர்கள், ஹிந்து ஹிட்லரிசத்திடமிருந்து தப்பிவிட்டனர். அரசியல் துறையில் அன்னாரை, சிதைக்க வைக்கும் சூதுதான், காங்கிரசின் கூட்டுறவுடன் ஹிந்து ஹிட்ரரிசம் செய்யக் கருறுகிறது. ஜனாப் ஜின்னா, அத்தகைய நிலை கூடாது என்பதற்காகத்தான், தனி ஆடசித் திட்டம் வகுத்ததுள்ளார். நாமோ ஹிந்து ஹிட்லரிசத்திடம் சிக்கிக்கொண்டு, சிந்தை நொந்து வாழுகிறோம். இஸ்லாமியர் டிசாலேபோல், அரசு இழந்து இருப்பினும் ஆர்பம் இழக்காது உள்ளனர். நமது பிரமுகர்கள், ஆட்சியில் இருப்பினம் பெட்டெயின் போல், ஹிந்து ஹிட்லரிசத்தின் எடுபிடி ஆளாக உள்ளனர்.

ஹிந்து ஹிட்லரிசம் எவ்வளவு சாதாரண காரியத்திலும் தடை உத்தரவுகள் பிறப்பிக்கிறது தெரியுமோ, சென்ற வாரத்துப் பத்திரிககளில் ஒரு அரிய செய்திகண்டேன். அகோபிலமடம் ஜீயர் ஸ்வாமிகள், வைணவத் தோழர்களுக்கோர் தாக்கீது பிறப்பித்துள்ளார். கிராப்புத்தலை அநாசாரமாம், இனி, வைணர்கள், தலையில் குடிமிதான் வைக்கவேண்டுமாம்! கிராப்புத் தலைகளைக் காணச்சகிக்க வில்லையாம். இத்தகைய சாதாரண விஷயங்களில் கூட நுழைந்துவிடுகிறது ஹிந்து ஹிட்லரிசம். பார்ப்பனப் புரோகிதர்கள னைவரும் ஹிந்து ஹிட்லரிசத்தின் கெஸ்ட்டாப்போக்கள்! நமது பழமை விரும்பிகள் அனைவரும், அதற்கு ஐந்தாம் படைகள்! தோந்திகள் அதன் பாராசூட் படையினராவர்! ஏனெனில் அவர்கள் மாயத்தைப் பற்றிப்பேசிவிட்டு, மண்டல வாசிகளின் மனத்தில் பாரசூட் படையினர்போல குதித்து விடுகின்றனர். இவைகளைக் கடந்து முன்னேறும் விறுவிறுப்பான துருப்புகள் தேவை ஹிந்து ஹிட்லரிசத்தை முறியடிக்க பிரிட்டிஷார், இந்நாட்டு மக்கள், ஹிந்து ஹிட்லரிசத்திடம் சிக்கிகொண்டதைக் கண்டே, இங்கு ஆளமுடியும் எனத்துணிந்தனர். இல்லையேல் 40 கோடிமக்கள், உலகில் வேறு எங்காகிலும் அடிமைப் படிடிருக்கின்றனரா? புது அரசியல் திட்டம் வகுக்குங் காலங்களில், முஸ்லும்கள், இந்துக்கள் என்று பெரும்பிரிவுகளாக மட்டும பிரித்துப்பேசும், பேதமை பிரிட்டிஷாரை விட்டபாடில்லை. நாம் இந்துக்களல்ல! நாம் தமிழர்! நமக்குத்தனிப் பண்புகள் உண்டு! நம்மை இந்துக்கள் என்ற கூற அனுமதிப்பதால் நாம் நமக்கு எத்தகைய விடுதலையும் கிடைக்க ஒட்டாதபடி செய்துகொள்கிறோம்.

லீகின் சக்தி தளர்ந்ததற்குக் காரணம் இதுதான். முஸ்லீம்கள், தனி இனம் என்று உணர்ந்து, உரக்க உரைத்து, ஊராள்வோரின் காதுகளில் உறுத்து மாறு செய்துவிட்டனர். ஆகவேதான் பிரிட்டிஷ் தூதர்கள், முஸ்லீம், இந்து என்று கூறுகின்றனர். நம்மை இந்து கோஷ்டியில் சேர்த்துவிடுகின்றனர். அந்தக் கோஷ்டியிலே நமக்கிருக்கும் நிலைமை, தாசர் நிலைதான்! சர் கிரிப்ஸ், நம்மை அந்த ஹிந்து ஹிட்லரிசத்திடமே ஒப்படைத்து விடத்துணிந்தால், தமிழர முழு மூச்சுடன் எதிர்க்கவேண்டும். எந்த ஆட்சியும், இந்து காலந்தொட்டு சவக்குழி புகுந்தபின்னரும், தமிழர் மீது அந்த ஹிட்லரிசம் ஆதிககம் செலுத்துகிறது. தமிழர் இதனை உணரவேண்டும். இதோ சர்.கிரிப்ஸ் வந்தார். முஸ்லிம்களின் பேச்சிலே ஒரு சக்தி, அவர்கள் பேச்சிலே ஒரு தீரம் இருக்கிறது. இந்தியாவின் பிரச்சினையைப்பற்றி யோசிக்க சர். கிரிப்ஸ் வந்திருக்கிறார், அந்த நேரத்தில் இதுதான் பிரச்சினை என்ற திட்டமாகத் தெளிவாக, தீரமாகக் கூற பாகிஸ்தான் வாரம் கொண்டாடப்படுகிறது. சர்.கிரிப்ஸ் தங்கியுள்ள மாளிகை உள்ள டில்லியில், ஜனாப். ஜின்னா, பாகிஸ்தானுக்காகப் போராடுவோம் என்ற முழக்கம் செய்கிறார். இதுதான் ஹிந்து ஹிட்லரிசத்திடம் சிக்காதிருக்க வழி.

இங்கே சர்.கிரிப்ஸ் காரியுமிழும்படி, கிராப்புத் தலைவேண்டாம். குடுமியே தேவை என்று ஹிந்து ஹிட்லரிசத்தின் அதிகார வார்க்கத்தவரில் ஒருவரான, அகோபில மடத்து ஜீயர் தாக்கீது விடுக்கிறார். நாம் இருக்கும் கேவலமான நிலைமைக்கு இதைவிட வேறு உதாரணம் வேண்டுமோ! நக்கீரரே, இந்து மதம் தமிழருக்கு ஆகாது என்பதை விளக்கித் தமிழருக்குக் கூற வேண்டும், என்று நான் கூறினேன்.

ஆகட்டும், அடுததவாரத்திலிருந்து அந்தப் பணியை நான் செய்கிறேன் என்று நக்கீரன் வாக்களித்தார். அடுத்த வாரம் அவரைச் சந்தியுங்கள்.

 

பேரறிஞர் அண்ணா

(திராவிடநாடு – 29.03.1942)

ஆட்சிக்கும் கட்சிக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமை – அன்பில் மகேஷ்

ஆட்சிக்கும் கட்சிக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமை – அன்பில் மகேஷ்

பரம்பரைக் கர்ணம், மணியம் பதவிகளை ஒழித்தது யார்?

From https://www.facebook.com/athi.asuran.7/posts/660343745378353

பரம்பரைக் கர்ணம், மணியம் பதவிகளை ஒழித்தது யார்? தோழர் பெரியாரின் உழைப்பையும், அண்ணா, கலைஞர் அரசுகளின் ஆணைகளையும் மறைத்து, வரலாற்றைத் திரிக்கிறார், தோழர் இரவிக்குமார் MP.
“கிராமங்களில் ஜாதி ஒழிய வேண்டுமென்றால், கணக்குப்பிள்ளை வேலையைப் பறையருக்குக் கொடுக்க வேண்டும். மணியம் வேலையை பள்ளர், சக்கிலியர், குறவர்களுக்குக் கொடுக்க வேண்டும். கணக்குப் பிள்ளையாகப் பார்ப்பானும், மணியமாக பிள்ளையும், கவுண்டரும் இருப்பதால்தான் அங்கே ஜாதி உரிமை தோன்றுகிறது. ஆகவே ஜாதி ஒழிப்புக்கு நாம் தூண்ட வேண்டும். பரிகாரம் தேட வேண்டும்” என்று அறிவிப்பு செய்தார்”. (விடுதலை 12.04.1964 & 16.04.1964)
பெரியாரின் கனவை அண்ணா நனவாக்கினார். கிராம நிர்வாகம் என்பதில் இருந்த பார்ப்பன, ஆதிக்க ஜாதிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

பரம்பரைக் கர்ணம், மணியம் பதவிகளை ஒழித்தது யார்?

பரம்பரைக் கர்ணம், மணியம் பதவிகளை ஒழித்தது யார்?

Tamil Nadu Proprietary Estates Village Service and the Tamil Nadu Hereditary Village-Offices (Repeal) Act, 1968 எனும் சட்டத்தை 1968 அக்டோபர் 16 அன்று பிறப்பித்தார். அந்தச் சட்டத்தைச் செயல்படுத்தியதில் எழுந்த சில சட்டச் சிக்கல்களை – அடுத்து வந்த கலைஞர் ஆட்சி Tamil Nadu Village Officers Service Rules, 1970 எனும் சட்டத்தால் சரி செய்தது.
எதிர்பார்த்தபடியே இச்சட்டங்களை எதிர்த்து ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. 1973 மற்றும் 1975 ஆம் ஆண்டுகளில் அந்தச் சட்டச் சிக்கல்களைச் சரி செய்வதற்காக கலைஞரின் தி.மு.க. அரசு புதிய புதிய அரசாணைகளைப் பிறப்பித்தது….விரிவாகப் படியுங்கள் – வேண்டும் மீண்டும் திராவிடர் ஆட்சி நூலில் உள்ள ஒரு தலைப்பு மட்டும் காட்டாறு தளத்தில் – https://kaattaaru.com/article.php?sl=2021zr12q28e551789u
#DMK4TN

கிராமங்களைப் பற்றி தோழர் பெரியார் பேசுவதைப் பாருங்கள்.

“கிராமங்கள்  பலவற்றால்  ஆகிய  ஒரு  நாட்டை  ஒருவன்  கைப்பற்றி  ஆட்சி  செய்யும்போது,  அவன் இந்தக்  கிராம  வாழ்க்கையின்  அமைப்பைச்  சீர்குலைக்காமல்,  மேலும்  பலமாக்கி  வைத்துத்  தன்  ஆட்சியை  நிலை  பெறுத்துவதற்குச்  சாதகம்  செய்து  கொண்டான்.

ஒவ்வொரு  கிராமத்திற்கும்  ஒரு  தலைவனை  ஏற்படுத்தி  அவன்  மூலம்  தனக்குத்  தேவையான  கப்பத்தை வாங்கிக்  கொண்டு தன் கட்டளைப்படி  நடந்து  தனக்குதவிபுரிபவர்களுக்கு  ஒவ்வொரு  கிராமத்திலும்  வரி  நீக்கப்பட்ட  விளைநிலங்களை ஊழிய  இனாமென்றும்,  தேவதாயம்,  பிரம்மதாயம்  என்றும்  சாமிக்கும்,  பூசாரிக்கும்,  பிராமணருக்கும்  கொடுத்து  இவர்களைத்  தன்  ஆட்சிக்கு  அரண்களாக்கிக்  கொண்டான்.

கிராம அமைப்பு  முடி  ஆட்சிக்கும்,  கொடுங்கோன்மைக்கும்  சாதகமான  அமைப்பு  என்பதைக்  கண்டதினால்,  பழைய  இந்து  அரசர்கள்  காலத்தில்  இருந்த  இவ்வமைப்புப்  பின்னால்  முகமதிய  அரசர்களாலும்,  அதற்குப்பின் வந்த கிருஸ்தவ (இங்கிலீஸ்)   அரசாங்கத்தாலும்,   அப்படியே   காப்பாற்றப்பட்டு  வருகிறது.  (பகுத்தறிவு இதழ். மே 1936)

இந்து மதம் திணித்த ஜாதிஅமைப்பை அப்படியே நிலை நிறுத்தவும், வலிமைப்படுத்தவும் இந்த கிராம அமைப்பு பயன்பட்டது என்றார் பெரியார்.

இப்படிப்பட்ட கிராமங்களுக்குத் தலைவர்களையும், நிர்வாகிகளையும் தேர்ந்தெடுக்கும் முறை ஒன்றை இராஜராஜசோழன் தொடங்கி வைத்தார். அது தான் “குடவோலை முறை”. குடவோலை முறைப்படி, ஒவ்வொரு கிராமத்தையும் நிர்வகிக்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பார்கள். இப்போது நடக்கும் பஞ்சாயத்து போர்டு தேர்தலைப் போன்றது அது.

ஒரு முக்கியமான வேறுபாடு என்னவென்றால், குடவோலை முறையில் பார்ப்பனர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும். அவர்களுக்கு மட்டுமே அந்தத் தகுதி இருப்பதாக மன்னர்களே அறிவித்தார்கள். பார்ப்பனர்கள் மட்டுமே கிராமங்களை நிர்வகிக்கும் உரிமை பெற்றவர்களாக இருந்தார்கள்.

 ஆங்கிலேய அரசாங்கம் வந்த பிறகு, குடவோலை முறை மறைந்தது. 1802, 1895- களில் கிராம அதிகாரிகள் சட்டம் இயற்றப் பட்டது. அந்தச் சட்டத்தின்படியும் பரம்பரை பரம்பரையாக கிராமங்களை நிர்வகித்தவர்கள் என்ற அடிப்படையில் பார்ப்பனர்களே கிராம அதிகாரிகளாக நீடித்து வந்தனர். பார்ப்பனர்கள் வசிக்காத பல கிராமங் களில் பெரும் நில உடமையாளர்களாக இருந்த, பார்ப்பனரல்லாத உயர்ஜாதியினர் கிராம அதிகாரிகளாக வரத் தொடங்கினர்.

தற்காலத்திலுள்ள வி.ஏ.ஓ.க்களுக்கு இணையான பதவி அது. கிராம முன்சீஃப், கர்ணம், மணியம் என பல பெயர்களில் இந்தப் பரம்பரைப் பதவிகள் இருந்தன. இந்தப் பரம்பரைக் கிராம அதிகாரி களிடம் தான் நமது இருப்பிடச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், நில உரிமைப் பதிவுக்குத் தேவையான அடிப்படை ஆவணங்கள், நிலங்களின் எல்லைகள் குறித்த தகவல்கள் போன்ற பல அடிப்படையான சான்றிதழ்களைப் பெறவேண்டும்.

திராவிடர் அரசுகள் எத்தனையோ வகுப்புரிமைச் சட்டங்களை இயற்றினாலும், கல்வி, வேலை வாய்ப்பு, விவசாய, நில உரிமைகள்  வழங்கப்பட்டாலும் அவற்றைப் பெறுவதற்கு இந்தச் சான்றிதழ்கள் மிகவும் முக்கியம். அந்தச் சான்றுகளை வழங்கும் உரிமை பார்ப்பனர் களிடமும், அந்தந்தக் கிராமங்களிலிருந்து ஆதிக்க ஜாதியினரிடமும் இருந்தது.

ஒரு பட்டியலின மாணவரோ, பிற்படுத்தப்பட்ட சமுதாயத் திலேயே எளிய ஜாதி மாணவரோ, அந்தக் கிராமத்தில் பெரும்பான்மை யாக இல்லாத ஜாதி மாணவரோ அல்லது விவசாய, நில உரிமைகளைப் பெற விரும்பும் மக்களோ மேற்கண்ட ஆதிக்கவாதிகளிடம் சான்றிதழ் களைப் பெறுவதென்பது கனவிலும் நடக்காததாக இருந்தது.

நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்த கதையாக நமது உரிமைகள், ஏட்டில் இருந்தன. நடைமுறைக்கு வருவதில் பெரும் தடை இருந்தது. மக்கள் விடுதலையில் அக்கறையுள்ள – சமுதாயத்தை நன்கு அறிந்து வைத்துள்ள ஒரு அரசு மட்டுமே இதை நுணுக்கமாகப் புரிந்துகொண்டு எதிர்வினையாற்ற முடியும்.

தோழர் பெரியார் நீண்ட காலமாகவும், அந்த நேரத்திலும்,

கிராமங்களில் ஜாதி ஒழிய வேண்டுமென்றால், கணக்குப்பிள்ளை வேலையைப் பறையருக்குக் கொடுக்க வேண்டும். மணியம் வேலையை பள்ளர், சக்கிலியர், குறவர்களுக்குக் கொடுக்க வேண்டும். கணக்குப் பிள்ளையாகப் பார்ப்பானும், மணியமாக பிள்ளையும், கவுண்டரும் இருப்பதால்தான் அங்கே ஜாதி உரிமை தோன்றுகிறது. ஆகவே ஜாதி ஒழிப்புக்கு நாம் தூண்ட வேண்டும். பரிகாரம் தேட வேண்டும்” என்று அறிவிப்பு செய்தார். (விடுதலை 12.04.1964 & 16.04.1964)

என்றார். பெரியாரின் கனவை அண்ணா நனவாக்கினார். கிராம நிர்வாகம் என்பதில் இருந்த பார்ப்பன, ஆதிக்க ஜாதிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

Tamil Nadu Proprietary Estates Village Service and the Tamil Nadu Hereditary Village-Offices (Repeal) Act, 1968 எனும் சட்டத்தை 1968 அக்டோபர் 16 அன்று பிறப்பித்தார்.

அந்தச் சட்டத்தைச் செயல்படுத்தியதில் எழுந்த சில சட்டச் சிக்கல்களை – அடுத்து வந்த கலைஞர் ஆட்சி Tamil Nadu Village Officers Service Rules, 1970 எனும் சட்டத்தால் சரி செய்தது.

எதிர்பார்த்தபடியே இச்சட்டங்களை எதிர்த்து ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. 1973 மற்றும் 1975 ஆம் ஆண்டுகளில் அந்தச் சட்டச் சிக்கல்களைச் சரி செய்வதற்காக கலைஞரின் தி.மு.க. அரசு புதிய புதிய அரசாணைகளைப் பிறப்பித்தது.

கிராம அதிகாரி, கர்ணம்போன்ற எந்தப் பதவியாக இருந்தாலும் அவற்றுக்கு அரசு சார்பில் பொதுத்தேர்வு நடத்தப்படும். அதில் தேர்வாகும் எந்த ஜாதியினர் வேண்டுமானாலும் எந்தக் கிராமத்திற்கு வேண்டுமானாலும் கிராம நிர்வாக அதிகாரிகளாக நியமிக்கப்படலாம் என்ற நிலை உருவானது.

பஞ்சமிநிலக் கொள்ளைக்கு உடந்தையான பார்ப்பனர் மற்றும் கர்ணங்கள்மிராசுதார்கள்

ஆங்கிலேயர் காலத்தில் அரசுக்குச் சொந்தமாக இருந்த புறம் போக்கு நிலங்களில் விவசாயம் செய்து கொள்ள யார் வேண்டு மானாலும் விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிப்பவர்களுக்கு நிலம் கிடைக்க வேண்டுமானால், அந்தப் புறம்போக்கு நிலங்கள் இருக்கும் கிராமங்களில் உள்ள ஆதிக்க ஜாதிகளைச் சேர்ந்த இந்தக் கர்ணம், மணியம், முன்ஃப்புகளின் ஒப்புதல் வேண்டும். அவர்கள் மறுத்தால் யாருக்கும் நிலம் கிடைக்காது.

பார்ப்பனர்களோ, பெரும் நில உடமையாளர்களோ, நிலமே இல்லாத ஆதிக்க ஜாதியைச் சேர்ந்தவரோ யாராக இருந்தாலும், பட்டியலின மக்களுக்கோ, அந்தந்தக் கிராமங்களில் எண்ணிக்கை குறைவாக வாழும் ஜாதியினருக்கோ நில உரிமை கிடைப்பதை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்.

அதனால் தான், ஆங்கிலேயர் காலம் முதல் நீதிக்கட்சி காலம் வரை பட்டியலின மக்களுக்கு 12 இலட்சம் ஏக்கர் நிலங்கள் வழங்கப் பட்டன. (Depressed Classes Land Act G.O. No 1010/10-A (Revenue) 1892) அப்படி வழங்கப்பட்ட நிலங்களில் இன்று சுமார் 10 இலட்சம் ஏக்கர் நிலங்களைப் பட்டியலின மக்களிடமிருந்து இடைநிலை ஜாதியினர் பறித்துக் கொண்டனர்.

இந்து மதத்தின் ஜாதிமுறை என்பது சமுதாயத்தின் அனைத்துத் தளங்களிலும் ஆதிக்கத்தைச் செலுத்துவதை நாம் அறிவோம். பஞ்சமி நில அபகரிப்புக்குப் பின்னாலும் இந்து பார்ப்பன, ஜாதித்தத்துவங்களே இருக்கின்றன. அவை கிராம முன்ஃப், கர்ணம், மணியம் போன்றவர் களின் வழியாக பஞ்சமி நிலக் கொள்ளையை நடத்தின.

அப்படிப்பட்ட இந்து மத, ஜாதிமுறைப் பாதுகாப்புப் பதவி களைத்தான் அண்ணாவும், கலைஞரும் அதிரடியாகக் கலைத்தனர். ஒருவேளை இத்தகைய சட்டங்கள் பஞ்சமி நிலங்கள் வழங்கப்பட்ட காலத்திலேயே நிறைவேற்றப்பட்டிருக்குமானால் இத்தனை இலட்சம் ஏக்கர் நிலங்கள் பட்டியலின மக்களிடமிருந்து பறிபோயிருக்காது.

ஜாதியச் சமுதாயம் மீது நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதல்

பரம்பரைப் பதவிகளுக்கு எதிராக பொதுத்தேர்வுகள் வழியாக கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு செய்யப்படும் முறை உருவாக்கப் பட்ட, அதே காலகட்டத்தில், தமிழ்நாட்டு அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீடு சதவீதமும் 49 ஆக உயர்த்தப்பட்டது.

இதுபோன்ற தொடர்ச்சியான சட்டரீதியான கூட்டு நடவடிக்கை களும், இந்தச் சட்டங்களுக்கு ஆதரவாகப் பெரியார் திரட்டிக்கொடுத்த சமுதாய ஆதரவும் தமிழ்நாட்டு கிராமங்களில் நிலவிய கடுமையான பார்ப்பன, பார்ப்பனிய, இடைநிலை ஜாதிகளின் ஆதிக்கங்களின் மீது துல்லியத் தாக்குதல்களை நடத்தின.

– அதிஅசுரன், வேண்டும் மீண்டும் திராவிடர் ஆட்சி நூல்