அரசு ஊழியர்களுக்கு 10 சதம் ஊதிய உயர்வு + பொங்கல் போனஸ்
பரம்பரைக் கர்ணம், மணியம் பதவிகளை ஒழித்தது யார்?
From https://www.facebook.com/athi.asuran.7/posts/660343745378353
பரம்பரைக் கர்ணம், மணியம் பதவிகளை ஒழித்தது யார்? தோழர் பெரியாரின் உழைப்பையும், அண்ணா, கலைஞர் அரசுகளின் ஆணைகளையும் மறைத்து, வரலாற்றைத் திரிக்கிறார், தோழர் இரவிக்குமார் MP.
“கிராமங்களில் ஜாதி ஒழிய வேண்டுமென்றால், கணக்குப்பிள்ளை வேலையைப் பறையருக்குக் கொடுக்க வேண்டும். மணியம் வேலையை பள்ளர், சக்கிலியர், குறவர்களுக்குக் கொடுக்க வேண்டும். கணக்குப் பிள்ளையாகப் பார்ப்பானும், மணியமாக பிள்ளையும், கவுண்டரும் இருப்பதால்தான் அங்கே ஜாதி உரிமை தோன்றுகிறது. ஆகவே ஜாதி ஒழிப்புக்கு நாம் தூண்ட வேண்டும். பரிகாரம் தேட வேண்டும்” என்று அறிவிப்பு செய்தார்”. (விடுதலை 12.04.1964 & 16.04.1964)
பெரியாரின் கனவை அண்ணா நனவாக்கினார். கிராம நிர்வாகம் என்பதில் இருந்த பார்ப்பன, ஆதிக்க ஜாதிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
Tamil Nadu Proprietary Estates Village Service and the Tamil Nadu Hereditary Village-Offices (Repeal) Act, 1968 எனும் சட்டத்தை 1968 அக்டோபர் 16 அன்று பிறப்பித்தார். அந்தச் சட்டத்தைச் செயல்படுத்தியதில் எழுந்த சில சட்டச் சிக்கல்களை – அடுத்து வந்த கலைஞர் ஆட்சி Tamil Nadu Village Officers Service Rules, 1970 எனும் சட்டத்தால் சரி செய்தது.
எதிர்பார்த்தபடியே இச்சட்டங்களை எதிர்த்து ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. 1973 மற்றும் 1975 ஆம் ஆண்டுகளில் அந்தச் சட்டச் சிக்கல்களைச் சரி செய்வதற்காக கலைஞரின் தி.மு.க. அரசு புதிய புதிய அரசாணைகளைப் பிறப்பித்தது….விரிவாகப் படியுங்கள் – வேண்டும் மீண்டும் திராவிடர் ஆட்சி நூலில் உள்ள ஒரு தலைப்பு மட்டும் காட்டாறு தளத்தில் – https://kaattaaru.com/article.php?sl=2021zr12q28e551789u
#DMK4TN
கிராமங்களைப் பற்றி தோழர் பெரியார் பேசுவதைப் பாருங்கள்.
“கிராமங்கள் பலவற்றால் ஆகிய ஒரு நாட்டை ஒருவன் கைப்பற்றி ஆட்சி செய்யும்போது, அவன் இந்தக் கிராம வாழ்க்கையின் அமைப்பைச் சீர்குலைக்காமல், மேலும் பலமாக்கி வைத்துத் தன் ஆட்சியை நிலை பெறுத்துவதற்குச் சாதகம் செய்து கொண்டான்.
ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு தலைவனை ஏற்படுத்தி அவன் மூலம் தனக்குத் தேவையான கப்பத்தை வாங்கிக் கொண்டு தன் கட்டளைப்படி நடந்து தனக்குதவிபுரிபவர்களுக்கு ஒவ்வொரு கிராமத்திலும் வரி நீக்கப்பட்ட விளைநிலங்களை ஊழிய இனாமென்றும், தேவதாயம், பிரம்மதாயம் என்றும் சாமிக்கும், பூசாரிக்கும், பிராமணருக்கும் கொடுத்து இவர்களைத் தன் ஆட்சிக்கு அரண்களாக்கிக் கொண்டான்.
கிராம அமைப்பு முடி ஆட்சிக்கும், கொடுங்கோன்மைக்கும் சாதகமான அமைப்பு என்பதைக் கண்டதினால், பழைய இந்து அரசர்கள் காலத்தில் இருந்த இவ்வமைப்புப் பின்னால் முகமதிய அரசர்களாலும், அதற்குப்பின் வந்த கிருஸ்தவ (இங்கிலீஸ்) அரசாங்கத்தாலும், அப்படியே காப்பாற்றப்பட்டு வருகிறது. (பகுத்தறிவு இதழ். மே 1936)
இந்து மதம் திணித்த ஜாதிஅமைப்பை அப்படியே நிலை நிறுத்தவும், வலிமைப்படுத்தவும் இந்த கிராம அமைப்பு பயன்பட்டது என்றார் பெரியார்.
இப்படிப்பட்ட கிராமங்களுக்குத் தலைவர்களையும், நிர்வாகிகளையும் தேர்ந்தெடுக்கும் முறை ஒன்றை இராஜராஜசோழன் தொடங்கி வைத்தார். அது தான் “குடவோலை முறை”. குடவோலை முறைப்படி, ஒவ்வொரு கிராமத்தையும் நிர்வகிக்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பார்கள். இப்போது நடக்கும் பஞ்சாயத்து போர்டு தேர்தலைப் போன்றது அது.
ஒரு முக்கியமான வேறுபாடு என்னவென்றால், குடவோலை முறையில் பார்ப்பனர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும். அவர்களுக்கு மட்டுமே அந்தத் தகுதி இருப்பதாக மன்னர்களே அறிவித்தார்கள். பார்ப்பனர்கள் மட்டுமே கிராமங்களை நிர்வகிக்கும் உரிமை பெற்றவர்களாக இருந்தார்கள்.
ஆங்கிலேய அரசாங்கம் வந்த பிறகு, குடவோலை முறை மறைந்தது. 1802, 1895- களில் கிராம அதிகாரிகள் சட்டம் இயற்றப் பட்டது. அந்தச் சட்டத்தின்படியும் பரம்பரை பரம்பரையாக கிராமங்களை நிர்வகித்தவர்கள் என்ற அடிப்படையில் பார்ப்பனர்களே கிராம அதிகாரிகளாக நீடித்து வந்தனர். பார்ப்பனர்கள் வசிக்காத பல கிராமங் களில் பெரும் நில உடமையாளர்களாக இருந்த, பார்ப்பனரல்லாத உயர்ஜாதியினர் கிராம அதிகாரிகளாக வரத் தொடங்கினர்.
தற்காலத்திலுள்ள வி.ஏ.ஓ.க்களுக்கு இணையான பதவி அது. கிராம முன்சீஃப், கர்ணம், மணியம் என பல பெயர்களில் இந்தப் பரம்பரைப் பதவிகள் இருந்தன. இந்தப் பரம்பரைக் கிராம அதிகாரி களிடம் தான் நமது இருப்பிடச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், நில உரிமைப் பதிவுக்குத் தேவையான அடிப்படை ஆவணங்கள், நிலங்களின் எல்லைகள் குறித்த தகவல்கள் போன்ற பல அடிப்படையான சான்றிதழ்களைப் பெறவேண்டும்.
திராவிடர் அரசுகள் எத்தனையோ வகுப்புரிமைச் சட்டங்களை இயற்றினாலும், கல்வி, வேலை வாய்ப்பு, விவசாய, நில உரிமைகள் வழங்கப்பட்டாலும் அவற்றைப் பெறுவதற்கு இந்தச் சான்றிதழ்கள் மிகவும் முக்கியம். அந்தச் சான்றுகளை வழங்கும் உரிமை பார்ப்பனர் களிடமும், அந்தந்தக் கிராமங்களிலிருந்து ஆதிக்க ஜாதியினரிடமும் இருந்தது.
ஒரு பட்டியலின மாணவரோ, பிற்படுத்தப்பட்ட சமுதாயத் திலேயே எளிய ஜாதி மாணவரோ, அந்தக் கிராமத்தில் பெரும்பான்மை யாக இல்லாத ஜாதி மாணவரோ அல்லது விவசாய, நில உரிமைகளைப் பெற விரும்பும் மக்களோ மேற்கண்ட ஆதிக்கவாதிகளிடம் சான்றிதழ் களைப் பெறுவதென்பது கனவிலும் நடக்காததாக இருந்தது.
நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்த கதையாக நமது உரிமைகள், ஏட்டில் இருந்தன. நடைமுறைக்கு வருவதில் பெரும் தடை இருந்தது. மக்கள் விடுதலையில் அக்கறையுள்ள – சமுதாயத்தை நன்கு அறிந்து வைத்துள்ள ஒரு அரசு மட்டுமே இதை நுணுக்கமாகப் புரிந்துகொண்டு எதிர்வினையாற்ற முடியும்.
தோழர் பெரியார் நீண்ட காலமாகவும், அந்த நேரத்திலும்,
கிராமங்களில் ஜாதி ஒழிய வேண்டுமென்றால், கணக்குப்பிள்ளை வேலையைப் பறையருக்குக் கொடுக்க வேண்டும். மணியம் வேலையை பள்ளர், சக்கிலியர், குறவர்களுக்குக் கொடுக்க வேண்டும். கணக்குப் பிள்ளையாகப் பார்ப்பானும், மணியமாக பிள்ளையும், கவுண்டரும் இருப்பதால்தான் அங்கே ஜாதி உரிமை தோன்றுகிறது. ஆகவே ஜாதி ஒழிப்புக்கு நாம் தூண்ட வேண்டும். பரிகாரம் தேட வேண்டும்” என்று அறிவிப்பு செய்தார். (விடுதலை 12.04.1964 & 16.04.1964)
என்றார். பெரியாரின் கனவை அண்ணா நனவாக்கினார். கிராம நிர்வாகம் என்பதில் இருந்த பார்ப்பன, ஆதிக்க ஜாதிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
Tamil Nadu Proprietary Estates Village Service and the Tamil Nadu Hereditary Village-Offices (Repeal) Act, 1968 எனும் சட்டத்தை 1968 அக்டோபர் 16 அன்று பிறப்பித்தார்.
அந்தச் சட்டத்தைச் செயல்படுத்தியதில் எழுந்த சில சட்டச் சிக்கல்களை – அடுத்து வந்த கலைஞர் ஆட்சி Tamil Nadu Village Officers Service Rules, 1970 எனும் சட்டத்தால் சரி செய்தது.
எதிர்பார்த்தபடியே இச்சட்டங்களை எதிர்த்து ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. 1973 மற்றும் 1975 ஆம் ஆண்டுகளில் அந்தச் சட்டச் சிக்கல்களைச் சரி செய்வதற்காக கலைஞரின் தி.மு.க. அரசு புதிய புதிய அரசாணைகளைப் பிறப்பித்தது.
கிராம அதிகாரி, கர்ணம்போன்ற எந்தப் பதவியாக இருந்தாலும் அவற்றுக்கு அரசு சார்பில் பொதுத்தேர்வு நடத்தப்படும். அதில் தேர்வாகும் எந்த ஜாதியினர் வேண்டுமானாலும் எந்தக் கிராமத்திற்கு வேண்டுமானாலும் கிராம நிர்வாக அதிகாரிகளாக நியமிக்கப்படலாம் என்ற நிலை உருவானது.
பஞ்சமிநிலக் கொள்ளைக்கு உடந்தையான பார்ப்பனர் மற்றும் கர்ணங்கள், மிராசுதார்கள்
ஆங்கிலேயர் காலத்தில் அரசுக்குச் சொந்தமாக இருந்த புறம் போக்கு நிலங்களில் விவசாயம் செய்து கொள்ள யார் வேண்டு மானாலும் விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிப்பவர்களுக்கு நிலம் கிடைக்க வேண்டுமானால், அந்தப் புறம்போக்கு நிலங்கள் இருக்கும் கிராமங்களில் உள்ள ஆதிக்க ஜாதிகளைச் சேர்ந்த இந்தக் கர்ணம், மணியம், முன்ஃப்புகளின் ஒப்புதல் வேண்டும். அவர்கள் மறுத்தால் யாருக்கும் நிலம் கிடைக்காது.
பார்ப்பனர்களோ, பெரும் நில உடமையாளர்களோ, நிலமே இல்லாத ஆதிக்க ஜாதியைச் சேர்ந்தவரோ யாராக இருந்தாலும், பட்டியலின மக்களுக்கோ, அந்தந்தக் கிராமங்களில் எண்ணிக்கை குறைவாக வாழும் ஜாதியினருக்கோ நில உரிமை கிடைப்பதை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்.
அதனால் தான், ஆங்கிலேயர் காலம் முதல் நீதிக்கட்சி காலம் வரை பட்டியலின மக்களுக்கு 12 இலட்சம் ஏக்கர் நிலங்கள் வழங்கப் பட்டன. (Depressed Classes Land Act G.O. No 1010/10-A (Revenue) 1892) அப்படி வழங்கப்பட்ட நிலங்களில் இன்று சுமார் 10 இலட்சம் ஏக்கர் நிலங்களைப் பட்டியலின மக்களிடமிருந்து இடைநிலை ஜாதியினர் பறித்துக் கொண்டனர்.
இந்து மதத்தின் ஜாதிமுறை என்பது சமுதாயத்தின் அனைத்துத் தளங்களிலும் ஆதிக்கத்தைச் செலுத்துவதை நாம் அறிவோம். பஞ்சமி நில அபகரிப்புக்குப் பின்னாலும் இந்து பார்ப்பன, ஜாதித்தத்துவங்களே இருக்கின்றன. அவை கிராம முன்ஃப், கர்ணம், மணியம் போன்றவர் களின் வழியாக பஞ்சமி நிலக் கொள்ளையை நடத்தின.
அப்படிப்பட்ட இந்து மத, ஜாதிமுறைப் பாதுகாப்புப் பதவி களைத்தான் அண்ணாவும், கலைஞரும் அதிரடியாகக் கலைத்தனர். ஒருவேளை இத்தகைய சட்டங்கள் பஞ்சமி நிலங்கள் வழங்கப்பட்ட காலத்திலேயே நிறைவேற்றப்பட்டிருக்குமானால் இத்தனை இலட்சம் ஏக்கர் நிலங்கள் பட்டியலின மக்களிடமிருந்து பறிபோயிருக்காது.
ஜாதியச் சமுதாயம் மீது நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதல்
பரம்பரைப் பதவிகளுக்கு எதிராக பொதுத்தேர்வுகள் வழியாக கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு செய்யப்படும் முறை உருவாக்கப் பட்ட, அதே காலகட்டத்தில், தமிழ்நாட்டு அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீடு சதவீதமும் 49 ஆக உயர்த்தப்பட்டது.
இதுபோன்ற தொடர்ச்சியான சட்டரீதியான கூட்டு நடவடிக்கை களும், இந்தச் சட்டங்களுக்கு ஆதரவாகப் பெரியார் திரட்டிக்கொடுத்த சமுதாய ஆதரவும் தமிழ்நாட்டு கிராமங்களில் நிலவிய கடுமையான பார்ப்பன, பார்ப்பனிய, இடைநிலை ஜாதிகளின் ஆதிக்கங்களின் மீது துல்லியத் தாக்குதல்களை நடத்தின.
– அதிஅசுரன், வேண்டும் மீண்டும் திராவிடர் ஆட்சி நூல்
டால்மியாபுரம் மீண்டும் கல்லக்குடியாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாள் இன்று
டால்மியாபுரம் மீண்டும் கல்லக்குடியாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாள் இன்று
இஸ்லாமியர்களை விடுதலை செய்ய மறுக்கிறதா திமுக
இஸ்லாமியர்களை விடுதலை செய்ய மறுக்கிறதா திமுக
இந்து சமய அறநிலைத்துறை – உண்மைகள்
இந்து சமய அறநிலைத்துறை – உண்மைகள்
நாத்திகர்களுக்கு கோவிலில் என்னவேலை
தமிழ்நாடு மாடல், திராவிட மாடல், குஜராத் மாடல், இலவசம், சமூக நலன்
தமிழ்நாடு மாடல், திராவிட மாடல், குஜராத் மாடல், இலவசம், சமூக நலன்
திராவிடமாடல்
இலவசங்களை கொடுத்தே திமுக தமிழ்நாட்ட சீரழித்ததுன்னு சொல்ற கும்பல் யாருன்னா பாத்தா
சீனாவில் இருக்கிற பாலங்களையும் ஜெர்மனில கட்டுன பில்டிங்கயெல்லாம் போட்டோஷாப் மூலம் குஜராத் மாடலா காட்டுன க்ரூப்புதாங்க!!!
ஆதாரத்தா காட்டுங்கன்னு கேட்டு பாருங்க
தலை தெறிக்க ஒடுவாங்க
இந்தியாவோட பொருளாதாரம் 3 ட்ரில்லியன் டாலர். அதுல பழைய மதறாஸ் மாகாணத்தில் இருந்த நான்கு தென் மாநிலங்களோட பங்களிப்பு மட்டும் 1 ட்ரில்லியன் டாலர தாண்டுது . மீதமுள்ள வடக்கு மாநிலங்கள் 27 ம் சேர்ந்து 2 ட்ரில்லியன் டாலர்தான் இருக்குது.
நான்கு மாநிலங்கள் ஒரு நாட்டோட பொருளதாரத்துல 33.3 சதவீதத்தை கொடுத்திருப்பது சிறந்த மாடலா?? வாயாலையே வடை சுடுற குஜராத் மாடல் சிறந்ததா?????
2020 ல ‘மின்சாரம் இல்லாத கிராமங்கள் என்று ஒன்றிய அரசு ஒரு திட்டத்த அறிவித்ததுதான் குஜராத் மாடலு
மின்சாரமில்லாத கிராமங்களே இல்லன்னு தமிழ் நாட்டில் 1974 லேயே கலைஞர் செயல்படுத்தி காட்டியதுதான் திராவிட மாடலு!!
உயர்கல்வியில் சேந்து படிக்கிறவுங்க 53 சதவீதம்னு காட்டிய திராவிட மாடலு எங்க
26 சதவீதத்தோட நொண்டி அடிக்கிற இந்தியாவின் குஜராத் மாடல் எங்கேன்னு கேக்கனுமா இல்லையா
நிலம் படைத்த உயர்சாதியினரை அண்டி தங்களுடய உணவுக்காக மட்டுமே விவசாயக் கூலிகளாய் இருந்த ஒடுக்கப்பட்டோருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கும்
ரூபாய்க்கு மூன்றுபடி லட்சியம் ஒரு படி நிச்சயம் என்று முழங்கி
கடைசியில் இலவசமாக வழங்கியது திராவிட மாடல்.
பேருந்துகளை அரசுடமையாக்கி 96 சதவீத கிராமங்களையும் நகரத்துடன் இணைத்ததோடு 69 சதவீத இட ஒதுக்கீட்டை திறம்பட கையாண்டதால் எளியவர்களும்
பல்கலை கழகங்ககள் வரை நுழைய வச்சது திராவிட மாடல்.
அடுத்த தலைமுறை பட்டதாரிகளை கம்ப்யூட்டர் காலத்திற்கும் தயார் படுத்தி வைத்திருந்த திராவிட மாடல் வேண்டுமா??
இல்லை.
தென்மாநிலங்களுக்கு தேவைப்படும் கூலித்தொழிளாலர்களை உருவாக்கி சப்ளை பன்ற மத்திய அரசின் குஜராத் மாடல் வேண்டுமா??
வளராத பீகாரோடும் உத்திரப்பிரதேசத்தோடும் ஏன் கம்பேர் பன்றீங்கன்னு உளறி வருகிறார்கள் காரியக்கார சங்கிகள் அப்பப்போ
இந்திய ஒன்றியத்தினுள்தானே தமிழ்நாடு இருக்குது.
அமெரிக்காவோடவா இருக்குது …..
மாணவர்களுக்கான பஸ் பாஸ், மதிய உணவு திட்டம்,செருப்பு,சீருடை, சைக்கிள்,லேப்டாப்,ஸ்கூல்பேக்
இப்படிகொடுத்த இலவசங்கள் எல்லாம் வருங்கால தலைமுறையோட கல்வி நலனுக்காக செய்த அர்த்தமுள்ள முதலீடுதான்.
வளர்ச்சியை உள்ளடக்கியதுதான் இலவசம் .
பணமதிப்பு நீக்க நடவடிக்கை போன்ற எந்தவித திட்டமிடலும் இல்லாத திட்டம்தான் குஜராத் மாடல் என்றால், அப்படிப்பட்ட மாடலை அவர்களே வைத்து கொள்ளட்டும்.
நம் திராவிட மாடலை நாடே பின்பற்றட்டும்.
**.
திராவிட பொருளாதாரம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர், திமுகவின் அயலக அணி இணைச்செயலர் அண்ணன் புதுகை எம்.எம்.அப்துல்லா அவர்களின் அறிமுக உரை
அவரது ஸ்டாலின் பஸ் இந்த நூலை நூலிலும் இது குறித்து வாசிக்கலாம்
மேலும் அறிந்த கொள்ள இந்த கட்டுரையை வாசிக்கவும்
நாம் பிறந்த தமிழகத்தைவிட எந்த மாநிலம் அனைத்திலும் பெரியது?
நாம் பிறந்த தமிழகத்தைவிட எந்த மாநிலம் அனைத்திலும் பெரியது?
ஒரு பொய்யை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தால், அது ஒரு நாள் உண்மை என நம்பப்படும் என்பார்கள். அப்படித்தான் தமிழ்நாட்டில் ஒரு பொய் பல வருடங்களாக சொல்லப்பட்டு வருகிறது. அது “50 வருட திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு சீரழிந்துவிட்டது” என்பது.
நாமும் எதைப்பற்றியும் சிந்திக்காமல், அதை ஆமோதித்துக் கொண்டு, நம்மை நாமே குறைவாக மதிப்பிட்டுக் கொண்டுள்ளோம் !!
கீழே உள்ள புள்ளி விவரங்களை கொஞ்சம் பாருங்கள் !!
#உயர்_கல்வி
பள்ளிக் கல்வியை முடித்து, உயர் கல்வி (கல்லூரி) சேர்பவர்கள், இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிகம். அகில இந்திய சராசரியைவிட இருமடங்கு அதிகம்.
தமிழ் நாடு – 38.2%. பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 17.6%; மபி – 17.4%; உபி – 16.8%; ராஜஸ்தான் – 18.0%; இந்திய சராசரி : 20.4ரூ.
#கல்விநிலையங்களின்தரம்
2017 ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்களின் ரேங்க் பட்டியலை மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை (HRD) வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலின் படி,
முதல் 100 சிறந்த கல்லூரிகளில் 37 கல்லூரிகள் இருப்பது தமிழ் நாட்டில்,,,
பிஜேபி பல ஆண்டுகளாக ஆளும் மோடியின் மாடல் மாநிலம் குஜராத்தில் இருபத்தோ வெறும் மூன்றுதான். இதேபோல ஹிந்தி பெல்ட் மாநிலங்களான மபி, உபி, பிகார், ராஜஸ்தான் போன்றவற்றிலிருந்து ஒன்றுகூட இந்த பட்டியலில் இடம் பிடிக்கவில்லை.
முதல் 100 சிறந்த பொறியியல் கல்லூரிகளில், தமிழ் நாடு – 22 ; குஜராத் – 5 ; மபி – 3 ; உபி – 6 ; பீகார் – 1 ; ராஜஸ்தான் – 3.
முதல் 100 சிறந்த பல்கலைகழகங்களில்
தமிழ் நாடு – 24 ; குஜராத் – 2 ; மபி – 0 ; உபி – 7 ;
பிகார் – 0 ; ராஜஸ்தான் – 4
#பொருளாதாரமொத்தஉற்பத்தி (GDP)
இந்தியாவில் இருக்கும் 29 மாநிலங்களில், 20 மாநிலங்களின் ஒட்டுமொத்த ஜிடிபியை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்கள் அளிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பது #தமிழ்நாடு.
தமிழ் நாட்டின் வளர்ச்சி விகிதம் மற்ற தென் மாநிலங்களை விட அதிகமாக உள்ளது.
தமிழகத்தின் மொத்த வருமானம், ஒட்டு மொத்த #பாகிஸ்தான் நாட்டின் வருமானத்திற்கு சமம்.
ஒரு மாநிலத்தின் வருமானம் இந்தியாவிற்கே சவால் விடும் அண்டை நாட்டின் வருமானத்திற்கு நிகராக உள்ளதென்றால், அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும்.
தமிழ் நாடு – 18.80 lakh crore (2nd Place); பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 10.94 lakh crore (5th Place ; மபி – 7.35 lakh crore (10 th Place) ; உபி – 12.37 lakh crore (4 th Place) ; ராஜஸ்தான் – 7.67 lakh crore (7 th Place) ; சத்தீஸ்கர் – 2.77 lakh crore (17 th Place)
#சாப்ட்வேர்_ஏற்றுமதி (ஆயிரம் கோடியில்)
தமிழ் நாடு – 75,000 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 1917 ; மபி – 343 ; உபி – 13,740 ; ராஜஸ்தான் – 712; சத்தீஸ்கர் – 18
#சிசுமரணவிகிதம் 1000 பிறப்புக்கு
தமிழ் நாடு – 21 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 36 ; மபி – 54 ; உபி – 50 ; ராஜஸ்தான் -47 ; சத்தீஸ்கர் – 46 ; இந்திய சராசரி: 40
#ஒருலட்சம்பிரசவத்தில்தாய்இறக்கும்_விகிதம்
தமிழ் நாடு – 79 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 112 ; மபி – 221 ; உபி – 285; ராஜஸ்தான் – 244 ; சத்தீஸ்கர் – 221 ; இந்திய சராசரி : 167
#தடுப்பூசிஅளிக்கப்படும்குழந்தைகள்_சதவீதம்
தமிழ் நாடு – 86.7%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 55.2%; மபி – 48.9%; உபி – 29.9%; ராஜஸ்தான் – 31.9%; சத்தீஸ்கர் – 54%; இந்திய சராசரி : 51.2%
#கல்வி_விகிதாசாரம்
தமிழ் நாடு – 80.33%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 79%; மபி – 70%; உபி – 69%; ராஜஸ்தான் – 67%; சத்தீஸ்கர் – 71%; இந்திய சராசரி : 74%
ஆண் – பெண் விகிதாசாரம் (ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு) இது குறைவாக இருந்தால், பெண் சிசு கொலை அதிகம் என்று பொருள்):-
தமிழ் நாடு – 943 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 890 ; மபி – 918 ; உபி – 902 ; ராஜஸ்தான் – 888 ; இந்திய சராசரி : 919
#தனிநபர்வருமானம் (Per Capita Income) – ரூபாயில்
தமிழ் நாடு – 1,28,366 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 1,06,831; மபி – 59,770 ; உபி – 40,373 ; ராஜஸ்தான் – 65,974 ; சத்தீஸ்கர் – 64,442; இந்திய சராசரி : 93,293
தமிழ்நாடு அரசு மாநில வரி வருமானத்தில், இந்தியாவில் நான்காவது இடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் பெரும்பான்மையான இந்திய மாநிலங்களை ஒப்பிடுகையில் அதிகமாக உள்ளது.
#வீடுகளுக்கு_மின்சாரம் (households having electricity)
தமிழ் நாடு – 98.3%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 96%; மபி – 89.9%; உபி – 70.9%; ராஜஸ்தான் – 91%; சத்தீஸ்கர் – 95.6%
#மனிதவளகுறியீடு (Human Development Index)
தமிழ் நாடு – 0.6663 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 0.6164 ; மபி – 0.5567 ; உபி – 0.5415 ; ராஜஸ்தான் – 0.5768 ; சத்தீஸ்கர் – 0.358 ; இந்திய சராசரி : 0.6087
#ஏழ்மை_சதவீதம் Poverty (% of people below poverty line)
தமிழ் நாடு – 11.28%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 16.63%; மபி – 31.65%; உபி – 29.43%; ராஜஸ்தான் – 14.71%; சத்தீஸ்கர் – 39.93%; இந்திய சராசரி : 21.92%
#ஊட்டசத்துகுறைபாடுகுழந்தைகள் (Malnutrition)
தமிழ் நாடு – 18%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 33.5%; மபி – 40%; உபி – 45%; ராஜஸ்தான் – 32%; சத்தீஸ்கர் – 35%; இந்திய சராசரி : 28%
#மருத்துவர்களின்_எண்ணிக்கை (ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு)
தமிழ் நாடு – 149; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 87; மபி – 41 ; உபி – 31; ராஜஸ்தான்-48 ; சத்தீஸ்கர்-23 ; இந்திய சராசரி:36
இன்னும் இது போல சொல்லிக் கொண்டே போகலாம்,,,,
உலக புகழ் பெற்ற பொருளாதார நிபுணரும்,நோபல் பரிசு வென்ற அமெர்த்தியா சென் அவர்கள் , தமிழ்நாட்டின் வளர்ச்சியை பற்றி இவ்வாறாக கூறுகிறார்,,,,
#தமிழ்நாட்டைவடமாநிலங்களோடுஒப்பிடுவதேதவறு #முன்னேறியநாடுகளோடுதான்ஒப்பிட_வேண்டும்
இனி எவனாவது தமிழ்நாடு திராவிடக் கட்சிகளால் நாசமாய் போச்சு என்றால், வட மாநிலத்திற்கு போகும் அடுத்த ரயிலில் ஏற்றி அனுப்பவும்
இந்த காணொளிகளையும் பார்க்கவும்
திமுகவின் முதல் தலைவரும் இரண்டாம் தலைவரும்
திமுகவின் முதல் தலைவரும் இரண்டாம் தலைவரும்
தந்தை பெரியார் நினைவு நாள் சூளுரை
தந்தை பெரியார் நினைவு நாள் சூளுரை