Category Archives: திமுக செயல்பாடுகள்

திராவிட விருட்சம் – தாய் மொழியின் முக்கியத்துவம், தமிழ் நாட்டின் முன்னேற்றம்

திராவிட விருட்சம் – தாய் மொழியின் முக்கி

யத்துவம், தமிழ் நாட்டின் முன்னேற்றம்

நாம் பிறந்த தமிழகத்தைவிட எந்த மாநிலம் அனைத்திலும் பெரியது?

நாம் பிறந்த தமிழகத்தைவிட எந்த மாநிலம் அனைத்திலும் பெரியது?

ஒரு பொய்யை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தால், அது ஒரு நாள் உண்மை என நம்பப்படும் என்பார்கள். அப்படித்தான் தமிழ்நாட்டில் ஒரு பொய் பல வருடங்களாக சொல்லப்பட்டு வருகிறது. அது “50 வருட திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு சீரழிந்துவிட்டது” என்பது.

நாமும் எதைப்பற்றியும் சிந்திக்காமல், அதை ஆமோதித்துக் கொண்டு, நம்மை நாமே குறைவாக மதிப்பிட்டுக் கொண்டுள்ளோம் !!

கீழே உள்ள புள்ளி விவரங்களை கொஞ்சம் பாருங்கள் !!

#உயர்_கல்வி

பள்ளிக் கல்வியை முடித்து, உயர் கல்வி (கல்லூரி) சேர்பவர்கள், இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிகம். அகில இந்திய சராசரியைவிட இருமடங்கு அதிகம்.

தமிழ் நாடு – 38.2%. பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 17.6%; மபி – 17.4%; உபி – 16.8%; ராஜஸ்தான் – 18.0%; இந்திய சராசரி : 20.4ரூ.

#கல்விநிலையங்களின்தரம்

2017 ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்களின் ரேங்க் பட்டியலை மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை (HRD) வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலின் படி,

முதல் 100 சிறந்த கல்லூரிகளில் 37 கல்லூரிகள் இருப்பது தமிழ் நாட்டில்,,,

பிஜேபி பல ஆண்டுகளாக ஆளும் மோடியின் மாடல் மாநிலம் குஜராத்தில் இருபத்தோ வெறும் மூன்றுதான். இதேபோல ஹிந்தி பெல்ட் மாநிலங்களான மபி, உபி, பிகார், ராஜஸ்தான் போன்றவற்றிலிருந்து ஒன்றுகூட இந்த பட்டியலில் இடம் பிடிக்கவில்லை.

முதல் 100 சிறந்த பொறியியல் கல்லூரிகளில், தமிழ் நாடு – 22 ; குஜராத் – 5 ; மபி – 3 ; உபி – 6 ; பீகார் – 1 ; ராஜஸ்தான் – 3.

முதல் 100 சிறந்த பல்கலைகழகங்களில்

தமிழ் நாடு – 24 ; குஜராத் – 2 ; மபி – 0 ; உபி – 7 ;

பிகார் – 0 ; ராஜஸ்தான் – 4

#பொருளாதாரமொத்தஉற்பத்தி (GDP)

இந்தியாவில் இருக்கும் 29 மாநிலங்களில், 20 மாநிலங்களின் ஒட்டுமொத்த ஜிடிபியை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்கள் அளிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பது #தமிழ்நாடு.

தமிழ் நாட்டின் வளர்ச்சி விகிதம் மற்ற தென் மாநிலங்களை விட அதிகமாக உள்ளது.

தமிழகத்தின் மொத்த வருமானம், ஒட்டு மொத்த #பாகிஸ்தான் நாட்டின் வருமானத்திற்கு சமம்.

ஒரு மாநிலத்தின் வருமானம் இந்தியாவிற்கே சவால் விடும் அண்டை நாட்டின் வருமானத்திற்கு நிகராக உள்ளதென்றால், அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும்.

தமிழ் நாடு – 18.80 lakh crore (2nd Place); பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 10.94 lakh crore (5th Place ; மபி – 7.35 lakh crore (10 th Place) ; உபி – 12.37 lakh crore (4 th Place) ; ராஜஸ்தான் – 7.67 lakh crore (7 th Place) ; சத்தீஸ்கர் – 2.77 lakh crore (17 th Place)

#சாப்ட்வேர்_ஏற்றுமதி (ஆயிரம் கோடியில்)

தமிழ் நாடு – 75,000 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 1917 ; மபி – 343 ; உபி – 13,740 ; ராஜஸ்தான் – 712; சத்தீஸ்கர் – 18

#சிசுமரணவிகிதம் 1000 பிறப்புக்கு

தமிழ் நாடு – 21 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 36 ; மபி – 54 ; உபி – 50 ; ராஜஸ்தான் -47 ; சத்தீஸ்கர் – 46 ; இந்திய சராசரி: 40

#ஒருலட்சம்பிரசவத்தில்தாய்இறக்கும்_விகிதம்

தமிழ் நாடு – 79 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 112 ; மபி – 221 ; உபி – 285; ராஜஸ்தான் – 244 ; சத்தீஸ்கர் – 221 ; இந்திய சராசரி : 167

#தடுப்பூசிஅளிக்கப்படும்குழந்தைகள்_சதவீதம்

தமிழ் நாடு – 86.7%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 55.2%; மபி – 48.9%; உபி – 29.9%; ராஜஸ்தான் – 31.9%; சத்தீஸ்கர் – 54%; இந்திய சராசரி : 51.2%

#கல்வி_விகிதாசாரம்

தமிழ் நாடு – 80.33%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 79%; மபி – 70%; உபி – 69%; ராஜஸ்தான் – 67%; சத்தீஸ்கர் – 71%; இந்திய சராசரி : 74%

ஆண் – பெண் விகிதாசாரம் (ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு) இது குறைவாக இருந்தால், பெண் சிசு கொலை அதிகம் என்று பொருள்):-

தமிழ் நாடு – 943 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 890 ; மபி – 918 ; உபி – 902 ; ராஜஸ்தான் – 888 ; இந்திய சராசரி : 919

#தனிநபர்வருமானம் (Per Capita Income) – ரூபாயில்

தமிழ் நாடு – 1,28,366 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 1,06,831; மபி – 59,770 ; உபி – 40,373 ; ராஜஸ்தான் – 65,974 ; சத்தீஸ்கர் – 64,442; இந்திய சராசரி : 93,293

தமிழ்நாடு அரசு மாநில வரி வருமானத்தில், இந்தியாவில் நான்காவது இடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் பெரும்பான்மையான இந்திய மாநிலங்களை ஒப்பிடுகையில் அதிகமாக உள்ளது.

#வீடுகளுக்கு_மின்சாரம் (households having electricity)

தமிழ் நாடு – 98.3%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 96%; மபி – 89.9%; உபி – 70.9%; ராஜஸ்தான் – 91%; சத்தீஸ்கர் – 95.6%

#மனிதவளகுறியீடு (Human Development Index)

தமிழ் நாடு – 0.6663 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 0.6164 ; மபி – 0.5567 ; உபி – 0.5415 ; ராஜஸ்தான் – 0.5768 ; சத்தீஸ்கர் – 0.358 ; இந்திய சராசரி : 0.6087

#ஏழ்மை_சதவீதம் Poverty (% of people below poverty line)

தமிழ் நாடு – 11.28%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 16.63%; மபி – 31.65%; உபி – 29.43%; ராஜஸ்தான் – 14.71%; சத்தீஸ்கர் – 39.93%; இந்திய சராசரி : 21.92%

#ஊட்டசத்துகுறைபாடுகுழந்தைகள் (Malnutrition)

தமிழ் நாடு – 18%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 33.5%; மபி – 40%; உபி – 45%; ராஜஸ்தான் – 32%; சத்தீஸ்கர் – 35%; இந்திய சராசரி : 28%

#மருத்துவர்களின்_எண்ணிக்கை (ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு)

தமிழ் நாடு – 149; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 87; மபி – 41 ; உபி – 31; ராஜஸ்தான்-48 ; சத்தீஸ்கர்-23 ; இந்திய சராசரி:36

இன்னும் இது போல சொல்லிக் கொண்டே போகலாம்,,,,

உலக புகழ் பெற்ற பொருளாதார நிபுணரும்,நோபல் பரிசு வென்ற அமெர்த்தியா சென் அவர்கள் , தமிழ்நாட்டின் வளர்ச்சியை பற்றி இவ்வாறாக கூறுகிறார்,,,,

#தமிழ்நாட்டைவடமாநிலங்களோடுஒப்பிடுவதேதவறு #முன்னேறியநாடுகளோடுதான்ஒப்பிட_வேண்டும்

இனி எவனாவது தமிழ்நாடு திராவிடக் கட்சிகளால் நாசமாய் போச்சு என்றால், வட மாநிலத்திற்கு போகும் அடுத்த ரயிலில் ஏற்றி அனுப்பவும்

இந்த காணொளிகளையும் பார்க்கவும்

வருங்காலம் குறித்து கல்வி அமைச்சரின் சீர்மிகு உரை

வருங்காலம் குறித்து கல்வி அமைச்சரின் சீர்மிகு உரை

 

திராவிட கட்சிகள் தமிழ்நாட்டை அழிச்சிட்டாங்களா?… காமராஜருக்கு பிறகு தமிழ்நாடு வளரவில்லையா?… மறைக்கப்பட்ட உண்மைகள்…!!!

திராவிட கட்சிகள் தமிழ்நாட்டை அழிச்சிட்டாங்களா?… காமராஜருக்கு பிறகு தமிழ்நாடு வளரவில்லையா?… மறைக்கப்பட்ட உண்மைகள்…!!!

பாராளுமன்றத்தில் நீட்டிற்கு எதிராக களமாடும் திமுக எம்.பி.க்கள்

பாராளுமன்றத்தில் நீட்டிற்கு எதிராக களமாடும் திமுக எம்.பி.க்கள்

பத்திரிக்கையாளர்கள் நலனில் திமுக அரசு

பத்திரிக்கையாளர்கள் நலனில் திமுக அரசு

யாருக்கானது திமுக அரசு

யாருக்கானது திமுக அரசு