Category Archives: கட்டுரைகள்

Caste and Community : Based on Area and Religion : Clarifications

Caste Belonging to Religion Area Quota
ST Any All areas ST
       
SC Hindu, Buddhism, Jainism All areas SC
SC Religions Other than Hindu, Buddhism, Jainism All areas BC
       
MBC / DC Other than Meenavar, Parvatharajakulam, Pattanavar, Sembadavar, Mukkuvar, Mukayar, Paravar Hindu, Buddhism, Jainism All areas MBC
MBC / DC Other than Meenavar, Parvatharajakulam, Pattanavar, Sembadavar, Mukkuvar, Mukayar, Paravar Religions Other than Hindu, Buddhism, Jainism All areas BC
       
Meenavar, Parvatharajakulam, Pattanavar, Sembadavar, Mukkuvar, Mukayar, Paravar Hindu, Buddhism, Jainism Kanyakumari and Shengottah Taluk SC
Meenavar, Parvatharajakulam, Pattanavar, Sembadavar, Mukkuvar, Mukayar, Paravar Christianity Other than Kanyakumari and Shengottah Taluk MBC
Meenavar, Parvatharajakulam, Pattanavar, Sembadavar, Mukkuvar, Mukayar, Paravar Religions other than Hindu, Buddhism, Jainism, Christianity All areas BC

 

இந்து இட்லரிசம்! – (திராவிடநாடு – 29.03.1942)

இந்து இட்லரிசம்!

 

பரதா! இதோபார், நீ இனிமேல் இந்திரன், வருணன், வாயு அக்கினி, முலிய தேவாதிகள் இல்லை என்று கூறிக்கொணடிராதே என்று ஒரு நாள் நக்கீரன் கூறினார். இந்த வெடிகுண்டு வீச்சு என்னைத் தூக்கி வாரிப்போட்டுவிட்டது. நமது தோழர்களிலே நான் எத்தனையோ வகையானவர்களைக் கண்டிருக்கிறேன். அபிப்பிராயங்கள் அந்தர்பல்டி அடிக்கடிக் கண்டிருக்கிறேன். நமது தோழர்களிலே, நிழலைக்க்ணடு மிருளுவோர், நெருப்புடன் விளையாடுவோர், நேர் வழி மறந்து நிந்தனையால் சிந்தனையைச் சித்தரிப்போர்கூட உண்டு. ஆனால் நக்கீரன் இங்ஙனம், தேவாதிகளுக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டு பேச முன்வருவார் என்ற எதிர்பார்க்வேயில்லை. நான் கேட்டேன, என்ன நக்கீரரே! புத்தம்பிதிதாகப் பேசுகிறீர். புதுமை எது கட்டீர்? தோவிதிகளின் திருக்கடாட்சம் எவ்விதத்தால், எப்போது தங்கட்குக் கிடைத்தது?

தயவு கிடைத்ததாகவோ, தயவுகிடைக்கவேண்டுமென்று எதிர்ப்பார்த்தோ, நானா பரதா! பேசுபவன் என்று நக்கீரன் அறையவே அங்ஙனமிருக்க அக்னி முதலான தேவர்கள் சார்பாகத் தாங்கள் பேசக் காரணமென்ன? என்று மீண்டும் கேட்டேன்.

கேள் இதைப் பரதா! இந்திரன் முதலான தேவர்கள் நந்தமிழ் மக்களில் பெரும்பாலானவர்களிடம் தோழமையுடன் இருக்கக் கண்டேன். நமது தோழர்களின் ஆடையைக் கண்டீரன்றோ, ஆயிரம் பொத்தல், கண்ணாயிரமுடைய இந்திரனின் கடாட்சமன்றோ அது! ஏழைமக்களின் வயிற்றிலே, சதா, மூண்டிருக்கும் பசித்தீயை என்னென்று கூறுவது, அது அக்னியின் அன்புப் பெருக்கன்றோ! பெரும்பாரான பஞ்சை மக்களின் உணவு, காற்றுத் தானே பரதா! வாயுவின் வாஞ்சனையல்லவா அது! தரித்திரத்தில் புரளும் மக்களின் கண்களைக் கண்டிருப்பீர், வருணன் பிரத்யட்சமல்லவா! இதுபோல், அந்தத் தேவாதிகள் காட்சிதருவதால்தான், நான் அந்தத் தேவாதிகளைக் குறைகூறாதீர் என்றுரைத்தேன் என்று முடித்தார் நக்கீரன்.

நான் அவரது நகைச்சுவை பொருந்திய பேச்சைக்கண்டு சிரித்தேன். அவர் கூறினது, முன்னாளில், கவிகாளமேகம் பாடிய ஓர் பாடலின் சாசயல்கொண்டது. இத்தகைய வேடிக்கைக்குத் தேவாதிகளின் கதை பயன்படுகிறதேயல்லாமல், சுவைக்கு உதவுகிறதா! இவ்வளவு ரட்சகர்களை ஏட்டில் எழுதிவைத்துக்கொண்டு, கஷ்டத்திலேயே புரளும் மக்கள் இங்கிருப்பதுபோல் வேறெங்கும் கிடையாது என்னலாம். அற்புதக் கதைகளைக் காதுகுடையும் அளவுக்குக் கூறிட புராணீகர்கள் எவ்வளவு, இந்நாட்டில் வாழ்க்கையில் குடைச்சலோடு வதையும் மக்கள் எத்தனை கோடிபேர்! எவ்வளவு மகேஸ்வரர்ககளை, இந்துமதம், நம்முன்னால் கொண்டுவந்து நிறுத்துகிறது, எவ்வளவு விமரிசையான விழாக்கள் நடத்திவைக்கிறது, விதவிதமான ஆராதனைகள் செய்யத் தூண்டுகிறது, இருந்துமென்ன, இருதயவலியில்லாத மக்கள் எங்கே இருக்கிறார்கள்? பாதிக்குதே பசி என்றுரைத்தால் செய்த பாபத்தைக் காரணம் காட்டுவார் . . . வேறென்ன நடக்கிறது, கூறுங்கள் யோசித்து! அந்தக் குருடன், இந்த முடவன், அதோகிடந்து இருமும் நோயாளி, துடிக்கும் கிழம், துவண்டுபோகும் குழந்தை, தோல் பொம்மையான மாது, தொப்பென வீழ்ந்து மாயும் பஞ்சை, மாடிபக்கும் வண்டியை, மண்டையை முட்டுக்கொடுததுத் தள்ளும் பாட்டாளி, மார் வெடிக்கத் தன் மக்கள் துடிப்பரே என்றெண்ணி மனம் வெடிக்க மூட்டை தூக்கிக் கட்டைவெட்டி கக்கூஸ் கழுவி, கால்கை பிடித்து வாழும் கூலிக்வட்டம் – இந்த உருவங்களின் புலம்பலுக்கு, கேள்விகளுக்கு, குமுறலுக்கு, எங்கே ஐயா, பதில் கிடைக்கிறது! எங்கே ஆறுதல்! அவனைவன் செய்த வினையை அவனவன் அனுபவிக்கிறான் என்றும் என்றெழுதியதை அழித்தா எழுதமுடியும் என்றுங்கூறுவதைத் தவிர வேறு பேச்சுக் கிளம்பிற்றா!

வினை, எழுத்து, விதி, சோதனை இவைகள் தூளாயின தெரியுமோ, சம்மட்டியும் அரிவாளும் ஆளம் சஷியநாட்டிலே, அன்று எழுதியதை லெனின் அழித்து எழுதிக்காட்னார். அவதியுற்றோரை வாழச்செய்தார். அருள் மொழியால் அல்ல, தேவாலயஞ் சுற்றியல்ல, தமது தீரத்தால் வீரத்தால், நெஞ்சுறுதியால்!!

பாதிக்குதே பசி என்றுரைபோரும், அது உன் பாபம் என்று பதிலுரைப்போரும் அங்கு இல்லை! மத ஓடத்திலேறிய மாந்தரே பலி பீடத்தில் சாய்ந்தீரே! ஆம்! வைதீக வீடத்துக்கு நீங்கள் இங்கு பலியானீர்கள்! வாழ்வெனுங் கடலைக் கடக்க மதமெனம் ஓடமேறினீர். பார்ப்பனியமெனும் சண்டமாருதம், அந்த ஓடத்தை, வைதீகம் எனும் பாறைமீது மோதச்செய்தது, இந்தப் பலிபீடத்திலே சாய்ந்தீர்; இரத்தந் தோய்ந்த அந்தப் பலிபீடத்தை மனக்கண் படைத்தோர் காண முடியும்!

அந்தப் பலிபீடத்திலே சாய்ந்தவரின் தொகை கணக்கினில் அடங்காது!

அந்தக் கடலைக் கடந்தாக வேண்டுமென்பதற்காக மத ஓடமேறியவர்கள் பலிபீடத்திலே சாய்ந்தனர். வேறுசிலர, ஓடத்தில் ஏறாது, கடலை நீந்திக்கடக்கத் துணிந்து, சுறாவுக்கும், சுழல் அலைக்கம், விஷப்பூச்கிளுக்கும் இரையாவதுபோல், களவு, கொலை, கடுந்தொழில், ஆகிய காரியங்கள் செய்தேனும் பிழைப்போம் என்று ஆரம்பித்து, தண்னையும் நிந்தனையும் பெற்றுத் தலைசாய்ந்தனர். இத்தகைய பல எண்ணங்களை, என் மனத்திலே எழுப்பின, நக்கீரனின் பேச்சு, இந்து மார்க்கத்தில் கிடந்துழலும் மக்களக்கு ளீமார்க்கம் கிடைக்கவேண்டும்.

சர், ஸ்டார்போர்டு கிரிப்சோ, மிஸ்டர் சரிச்சிலோ, தாமாக மனமுவந்தோ, நம் நாட்டுத் தலைவர்களின் கூட்டு எச்சரிக்கையைக் கேட்ட பிறகோ, இந்தியாவை, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியப் பிடியிலிருந்தும், பிணைப்பிலிருந்துங்கூட விடுவித்துவிடலாம்.

ஐரோப்பியாவில் அதிவேகமாகப் பரவிவிட்ட ஹிட்லரிசத்தை, ஜனநாயகக் கோட்பாடுடைய நாட்டுப் படைகள், ஜெர்மனியிலிருந்தே விரட்டிவிடமுடியும்.

ஹிந்து ஹிட்லரிசத்தை, பார்பனிய பாசீசத்தை, ஆரிய ஏகாதிபத்தியத்தை, சர்.கிரிப்சாலும், இந்நாட்டிலிருந்து தொலைக்க முடியாது, ரூஸ்வெல்ட்டாலும் இயலாது.

அட்லாண்டிக் சாசனத்தினால், ஆரிய ஆதிக்கம் அகற்றப்பட வழி ஏற்படாத, ஹிந்து ஹிட்லரிசத்தை, இந்நாட்டுடப் பழம்பெருங்குடி மக்களாகிய நாம் முனைந்தால்தான் முறியடிக்க முடியும்.

ஹிந்து ஹிட்லரிசத்துக்கு வீட்டுக்கு வீடு, ஐந்தாம் படை இருக்கும். தகப்பனாரோ, தயாயாரோ, தாய் மாமனோ, ஹிந்து ஹிட்லரிசத்தின் ஏஜண்டாக இருந்துகொண்டு, அந்த ஹிட்லரிசத்தை எதிர்க்கம் தோழரகளைத் தொலைத்துவிடவும் தயாராக இருப்பர். நட்டுக் உண்மையான விடுதலை வேண்டுமென்றால், இந்த ஹிந்து ஹிட்லரிசத்திலிருந்து நாம் தப்பவேண்டும்.
ஹிட்லரிசம் சாந்தம் சமாதானம் சுபீட்சம் என்று பேசிக்கொண்டே சமரிலும், சதியிலும் சித்திரவதையிலும் இரண்டறக்கலப்பதுபோம், ஹிந்து ஹிட்லரிசம், பக்தி, பரமன், அருள் என்றுரைக்கம் ஆனால், உள்நோக்கம், அடிமைத்தனத்தைப் பெரும்பாலான மக்கள் மீது சுமத்தவேண்டும் என்பதுதான். ஹிந்து ஹிட்லரிசத்தால், உள்நாட்டில் குழப்பம், பிளவு, பேதம், அன்று தொட்டு இன்றவரை இருக்கிறது. ஒரு குலம், ம்ற்ற குலத்தை, மங்கி மடியச் செய்கிறது.
உழைப்பிலே செக்க மாடுகள், உணர்ச்சியிலே செம்மறியாடுகள், என்று கூறத்தக்க விதத்தில் தமிழர உருமாறிப்போனது, ஹிந்து ஹிட்லரிசத்துக்கு அடிபறிந்த காரணத்தாலேதான்.

புரி என இருந்தோர் இன்று பலர் முயலென வாழ்கின்றனர். வெகுசிலர் ஆமைபோல், (தீரத்தை) தலையை நீட்டுவதும், ஆளரவங்கேட்டதும் உள்ளுக்கு இழுத்துக் கொள்வதுமான உள்ளனர். ஹிந்து ஹிட்லரிசத்தால், ஒரு குலம், உழைக்கவேண்டிய அவசியமற்று, பிறரின் உழைப்பை உறிஞ்சும் கூடடமாகிவிட்டது. இதனால், அக்குலத்துக்கும் மற்றைய குலத்துக்கும் பகைமை மூண்டது. சிற்சில நேரங்களில் கவரை தென்படுகிறது. பிறசமயத்தில் கனல் வீசுகிறது, மூடபக்தி எனும் மூடுபனியால், சில சமயம் இந்தப்பகைமை, நீறுபூத்த நெருப்பெனக் காணப்படுகிறது. ஆனால், தீப்பொறிகள் திக்கெங்கும் கிளம்பிவிட்டன. தீயணைக்கம் படையின் திறமை நெடு நாள்களுக்க உபபோகமாகாது.

இத்தகைய ஹிட்லரிசத்தை, வெறுத்துக் கண்டித்து வேரறக் களைய வேண்டிய முழுப்பொறுப்பு, தமிழருடையது. முஸ்லீம்கள், அதன் முடிவணங்க மறுத்து மூலப்போருளைச் சேவிக்க இந்த சால வித்தைகள் ஏதுக்கு? என்று கூறிவிட்டனர். அவர்களை, ஹிந்து ஹிட்லரிசம், மதத்துறையில் ஏதும் செய்யமுடியாது. அஃதேபோல் கிறிஸ்தவர்களிடமும், இந்து ஹிட்லரிசம் நடவாது. மதத்துறையில் இஸ்லாமிய கிறிஸ்தவத் தோழர்கள், ஹிந்து ஹிட்லரிசத்திடமிருந்து தப்பிவிட்டனர். அரசியல் துறையில் அன்னாரை, சிதைக்க வைக்கும் சூதுதான், காங்கிரசின் கூட்டுறவுடன் ஹிந்து ஹிட்ரரிசம் செய்யக் கருறுகிறது. ஜனாப் ஜின்னா, அத்தகைய நிலை கூடாது என்பதற்காகத்தான், தனி ஆடசித் திட்டம் வகுத்ததுள்ளார். நாமோ ஹிந்து ஹிட்லரிசத்திடம் சிக்கிக்கொண்டு, சிந்தை நொந்து வாழுகிறோம். இஸ்லாமியர் டிசாலேபோல், அரசு இழந்து இருப்பினும் ஆர்பம் இழக்காது உள்ளனர். நமது பிரமுகர்கள், ஆட்சியில் இருப்பினம் பெட்டெயின் போல், ஹிந்து ஹிட்லரிசத்தின் எடுபிடி ஆளாக உள்ளனர்.

ஹிந்து ஹிட்லரிசம் எவ்வளவு சாதாரண காரியத்திலும் தடை உத்தரவுகள் பிறப்பிக்கிறது தெரியுமோ, சென்ற வாரத்துப் பத்திரிககளில் ஒரு அரிய செய்திகண்டேன். அகோபிலமடம் ஜீயர் ஸ்வாமிகள், வைணவத் தோழர்களுக்கோர் தாக்கீது பிறப்பித்துள்ளார். கிராப்புத்தலை அநாசாரமாம், இனி, வைணர்கள், தலையில் குடிமிதான் வைக்கவேண்டுமாம்! கிராப்புத் தலைகளைக் காணச்சகிக்க வில்லையாம். இத்தகைய சாதாரண விஷயங்களில் கூட நுழைந்துவிடுகிறது ஹிந்து ஹிட்லரிசம். பார்ப்பனப் புரோகிதர்கள னைவரும் ஹிந்து ஹிட்லரிசத்தின் கெஸ்ட்டாப்போக்கள்! நமது பழமை விரும்பிகள் அனைவரும், அதற்கு ஐந்தாம் படைகள்! தோந்திகள் அதன் பாராசூட் படையினராவர்! ஏனெனில் அவர்கள் மாயத்தைப் பற்றிப்பேசிவிட்டு, மண்டல வாசிகளின் மனத்தில் பாரசூட் படையினர்போல குதித்து விடுகின்றனர். இவைகளைக் கடந்து முன்னேறும் விறுவிறுப்பான துருப்புகள் தேவை ஹிந்து ஹிட்லரிசத்தை முறியடிக்க பிரிட்டிஷார், இந்நாட்டு மக்கள், ஹிந்து ஹிட்லரிசத்திடம் சிக்கிகொண்டதைக் கண்டே, இங்கு ஆளமுடியும் எனத்துணிந்தனர். இல்லையேல் 40 கோடிமக்கள், உலகில் வேறு எங்காகிலும் அடிமைப் படிடிருக்கின்றனரா? புது அரசியல் திட்டம் வகுக்குங் காலங்களில், முஸ்லும்கள், இந்துக்கள் என்று பெரும்பிரிவுகளாக மட்டும பிரித்துப்பேசும், பேதமை பிரிட்டிஷாரை விட்டபாடில்லை. நாம் இந்துக்களல்ல! நாம் தமிழர்! நமக்குத்தனிப் பண்புகள் உண்டு! நம்மை இந்துக்கள் என்ற கூற அனுமதிப்பதால் நாம் நமக்கு எத்தகைய விடுதலையும் கிடைக்க ஒட்டாதபடி செய்துகொள்கிறோம்.

லீகின் சக்தி தளர்ந்ததற்குக் காரணம் இதுதான். முஸ்லீம்கள், தனி இனம் என்று உணர்ந்து, உரக்க உரைத்து, ஊராள்வோரின் காதுகளில் உறுத்து மாறு செய்துவிட்டனர். ஆகவேதான் பிரிட்டிஷ் தூதர்கள், முஸ்லீம், இந்து என்று கூறுகின்றனர். நம்மை இந்து கோஷ்டியில் சேர்த்துவிடுகின்றனர். அந்தக் கோஷ்டியிலே நமக்கிருக்கும் நிலைமை, தாசர் நிலைதான்! சர் கிரிப்ஸ், நம்மை அந்த ஹிந்து ஹிட்லரிசத்திடமே ஒப்படைத்து விடத்துணிந்தால், தமிழர முழு மூச்சுடன் எதிர்க்கவேண்டும். எந்த ஆட்சியும், இந்து காலந்தொட்டு சவக்குழி புகுந்தபின்னரும், தமிழர் மீது அந்த ஹிட்லரிசம் ஆதிககம் செலுத்துகிறது. தமிழர் இதனை உணரவேண்டும். இதோ சர்.கிரிப்ஸ் வந்தார். முஸ்லிம்களின் பேச்சிலே ஒரு சக்தி, அவர்கள் பேச்சிலே ஒரு தீரம் இருக்கிறது. இந்தியாவின் பிரச்சினையைப்பற்றி யோசிக்க சர். கிரிப்ஸ் வந்திருக்கிறார், அந்த நேரத்தில் இதுதான் பிரச்சினை என்ற திட்டமாகத் தெளிவாக, தீரமாகக் கூற பாகிஸ்தான் வாரம் கொண்டாடப்படுகிறது. சர்.கிரிப்ஸ் தங்கியுள்ள மாளிகை உள்ள டில்லியில், ஜனாப். ஜின்னா, பாகிஸ்தானுக்காகப் போராடுவோம் என்ற முழக்கம் செய்கிறார். இதுதான் ஹிந்து ஹிட்லரிசத்திடம் சிக்காதிருக்க வழி.

இங்கே சர்.கிரிப்ஸ் காரியுமிழும்படி, கிராப்புத் தலைவேண்டாம். குடுமியே தேவை என்று ஹிந்து ஹிட்லரிசத்தின் அதிகார வார்க்கத்தவரில் ஒருவரான, அகோபில மடத்து ஜீயர் தாக்கீது விடுக்கிறார். நாம் இருக்கும் கேவலமான நிலைமைக்கு இதைவிட வேறு உதாரணம் வேண்டுமோ! நக்கீரரே, இந்து மதம் தமிழருக்கு ஆகாது என்பதை விளக்கித் தமிழருக்குக் கூற வேண்டும், என்று நான் கூறினேன்.

ஆகட்டும், அடுததவாரத்திலிருந்து அந்தப் பணியை நான் செய்கிறேன் என்று நக்கீரன் வாக்களித்தார். அடுத்த வாரம் அவரைச் சந்தியுங்கள்.

 

பேரறிஞர் அண்ணா

(திராவிடநாடு – 29.03.1942)

இந்துமதமும் தமிழரும்! – அண்ணாவின் ‘நக்கீரன்’ என்ற புனைப் பெயரில் வந்தது

இந்துமதமும் தமிழரும்!

 

 

சென்ற வாரம் ‘திராவிடநாடு” இதழில் எனது தோழன் பரதன் கேட்டுக்கொண்டதற்கேற்ப, இவ்வாரத்திலிருந்து, இந்து மதம் தமிழ்மக்களுக்கு ஏற்புடையதுதானா? என்பது பற்றிய கருத்துக்களை, ‘இந்துமதமுந் தமிழரும்’ என்ற தலைப்போடு எழுத முன்வந்துள்ளேன்.

இந்துமதமென்றால், அது எங்களுடையது என்றெண்ணி இறும்பூதெய்தி இருக்கும் தமிழ் மக்கள் பலர் நம்மைச் சூழ்ந்திருக் கின்றனர் என்பதை நாமறிவோம். இந்துமதமென்றால், அது ஆரியர்கள் தங்கள் வாழ்க்கைக் கப்பலை ஓட்டிச்செல்வதற்காக வெட்டிய ஒரு அகழ் என்பதை நம்மவர் பலர் இன்னுந் தெரிந்து கொள்ள முடியாத நிலையிலேயே இருக்கின்றனர் என்பதையும் நாம் அறிவோம். எனவே, இவ்விந்துமதத்தைப் பற்றிய உண்மை களைத் தமிழ்மக்கள் அனைவரும் தெரிந்து தெளிதல் பெரிதும் இன்றியமையாததாகும்.

இவ்விந்துமதம் தமிழ்நாட்டிற் பரவிய காலம், ஆரியர்கள் நம் நாட்டில் வந்து குடியேறித் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கிய காலத்தைக் குறிப்பதாகும். ஆரியர்கள் நம் நாட்டுக்கு வருமுன் இந்துமதம் என்ற ஒரு மதமோ அன்றி வேறு மதங்களோ இருந்தனவென்று துணிவதற்குத் துளி சான்றுகூடக் கிடையாது. ஆகையால், ஆரிய மதமாகிய இவ் இந்துமதத்தைத் தமிழ் மக்களுடைய மதம் என்றுரைக்க ஆராய்ச்சித்துறை கண்ட அறிவுடைய எவரும் முன்வரமாட்டார்கள். ஆரியர்கள் நம் நாட்டுக்கு வருவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே சிறந்த நாகரிக வாழ்க்கையை மேற்கொண்டு செம்மை நெறியில் ஒழுகி வந்த தமிழ்மக்களுக்கு, இடைப்பட்ட காலத்தில் ஆரியர்களால் கொண்டுவந்து புகுத்தப்பட்ட இந்துமதம் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல வென்பதை எடுத்துக்காட்டுதலே இக்கட்டுரையின் நோக்கமாகும். இதனைத் ‘திராவிடநாடு’ பகுதி பகுதியாகத் தொடர்ந்து வெளியிட்டுவரும்.

இப்போது இந்துமதம் என்று வைத்து வழங்கப்பட்டு வரும் மதத்திற்குப் பலர் பலவாறு பொருள் கூறுகின்றனர். அவற்றுட்சில வருமாறு: “இந்தியாவில் உள்ளவர்களின் மதமாதலால் இந்துமதம்” என்றும்; (இதுமேனாட்டறிஞரான மாக்ஸ்முல்லர் என்பவரின் கருத்து) சிந்துநதிக் கரையில் ஆரியர்கள் தங்கி யிருந்ததால், அவர்கள் இந்துக்கள் என்றும், இந்துமதத்தினர் என்றும் அழைக்கப்பெற்றனர் என்றும், பொருள் கூறுகின்றனர். ஆனால் மேற்சொன்ன இரண்டு காரணங்களும் பொய் என்பதை வலியுறுத்தி ஒரு உபநிடதம் அதன் உண்மைப் பொருளை விளக்கிக் காட்டுகின்றது. எப்படியெனில்,

“ஹிம்ஸாயாம் தூய தேயஸ: ஸ: ஹிந்துரி த்யபீதயதே.”

இதன் பொருள்:- எவன் ஒருவன் துன்பம் என்பதில் நின்று அல்லற்படுகின்றானோ அவன் இந்து என அழைக்கப்படுகிறான் என்பதாகும். எனவே, ஆரியர்கள் தங்களுக்கு இருக்க இடமும், உடுக்க உடையும், உண்ண உணவும் இன்றி ஊர்ஊராய்ச்சுற்றித் திரிந்து துன்புற்ற உண்மை பண்டைய வரலாறுகளால் வலியுறுவ தால் அவர்களை இந்துக்கள் என்றுகூறும் உபநிடதக் கருத்தையே நாமும் உண்மையெனக் கொள்ளல் வேண்டும். அற்றன்று ஆரியரல்லாத தமிழ்மக்களை இந்துக்கள் என்றழைப்பது பொருந்தாதோவெனக் கடாவுவார்க்கும் பொருந்தாதென்றே கூறுவோம். ஏனெனில் தமிழ்மக்கள் வாழ்க்கையை நடாத்த வகையறியாது ஊர் ஊராய்ச் சுற்றித்திரிந்து துன்புற்றசெய்தி எந்த வரலாற்று நூலிலும் காண்பதற்கில்லை. மற்று, ஆரியர் அல்லற்பட்டு அலைந்து திரிந்து துன்புற்றமைக்குச் சான்று பலஉள. விரிவஞ்சி ஒன்றிரண்டை மட்டும் ஈண்டெடுத்துக் காட்டுதும். ஆரியர்களின் முதல் நூலாகிய இருக்குவேத முதன் மண்டலத்தில் உள்ள 42-ஆம் பதிகத்தில் ஆரியர்கள் தங்கள் தலைவனான

இந்திரனை நோக்கிப் பின்வருமாறு வேண்டிக் கொள்ளுகிறார்கள். (1) “யாங்கள் செல்வத்தை எளிதில் அடையுமாறு செய்.

(2) புல்லடர்ந்திருக்கிற மேய்ச்சல் நிலங்களுக்கு எம்மை வழிகாட்டிச்செலுத்து.

(3) எங்களுக்கு வயிறுநிறைய உணவு கொடு.

(4) சுவித்ராளின் இளங்கன்றே, ஓ பகவானே துக்கிரனுடைய வீடுகளிடையே எங்களுக்கு நிலம்கிடைத்தல் வேண்டி, நடந்தபோரில் எங்களுக்கு உதவி செய்கின்றனை. ”

என்கின்ற இவ்விருக்குவேத உண்மைகள் ஆரியர்களின்மிடிப்பட்ட வாழ்க்கையைத் தெளிவாகக் காட்டுகின்ற தாகையால், இந்துக்கள் என்று அழைப்பதற்கு ஆரியமக்களே உரித்தானவர்கள் என்பது தெற்றெனப் புலனாகின்றது.

இனித் தமிழ் மக்கள் இருக்குவேத காலத்திற்கு முன்பிருந்தே சிறந்த செல்வ வாழ்க்கையில் திளைத்திருந்தனர் என்பதற்கும் அவ்விருக்குவேதமே பகர்கின்றது. அவற்றிலும் ஒன்றிரண்டு எடுத்துக் காட்டுதும். இருக்குவேத முதல் மண்டிலம் 104-ஆம் பதிகங்களில் பின்வருமாறு கூறப்பட்டள்ளது.

(1) “பொன் அணிகளாலும் மணிகளாலும் தம்மை ஒப்பனை

செய்து கொண்ட அவர்கள் (தமிழர்கள்) இந்நிலத்தை மறைத்து

ஓர் அடை விரித்தார்கள். (2) இந்நிலத்தில் கடைக்கோடி வரை ஊடுருவிப் பரவிநிற்கும் அவர்கள் (தமிழர்கள்) தம் மந்திர ஆற்றலால் இந்திரனை

வெல்ல மாட்டாராயினர்.

(3) இந்திரன் தனது குலிசப் படையால் அவர் (தமிழர்) களுடைய

கோட்டைகளைப் பிளந்து துகளாக்கினான். (4) குயவனுடைய மனைவியர் இருவரும் பாலிலே தலை முழுகுகின்றனர்! அவர்கள் சிபாயாற்றின் ஆழத்தில்

அமிழ்த்தப்படுவாராக.”

என்ற இவ்விருக்குவேத உண்மைகள் தமிழ் மக்களின் சிறந்த செல்வ வாழ்க்கையை நன்கு தெளிவுபடக் காட்டுவதோடு, தமிழ் மக்கள் எல்லாரும் செய்தொழிலை வேற்றுமையால் உயர்வு தாழ்வில்லாமல் ஒரே தன்மையாய்த் தங்கள் செல்வத்தினாற் பெறக்கூடிய இன்பங்களை நுகர்ந்து வந்தனர் என்பது, “குயவனுடைய மனைவியர் பாலிலே தலைமுழுகினார்கள்” என்பவை தெரியக் கிடக்கின்றது. என்றிதுகாறும் கூறியது கொண்டு தமிழ் மக்கள் எக்காரணத்தைக் கொண்டும் இந்துக்கள் என்றோ இந்து மதத்தினர் என்றே அழைக்கப்பட மாட்டார்கள் என்பது யாதொரு ஐயுறவுமின்றித் துணியப்படும். எனவே, இதுகாறும் தமிழ்மக்களை இந்துக்கள் என்ற பேதைமையினோர் இனி அவ்வாறு அழைக்க மாட்டார்கள் என்பது ஒரு தலை.

வடக்கே இமயமலைச் சாரலில் இருக்கும் கேதாரம் என்னும் இடத்திற்கும் தெற்கே தஞ்சாவூருக்கு அருகியிலுள்ள திருவையாறு என்னும் இடத்திற்கும் இடையேயுள்ள தொலைவு ஏறக்குறைய 2500-கல் இருக்கும். இவ்வளவு தொலைவைத் திருநாவுக்கரசர் தம்முடைய காற்சுவடு நிலத்திற் படாமல் எப்படி வந்தார் என்பது தெரியவில்லை. ஒரு வேளை நீருள் மூழ்கிய படியே காற்சுவடு நிலத்திற் படாமல் வந்தார் என்றால், அத்தகைய ஒரு நீர்த்தொடர் கேதாரத்திற்கும் திருவையாற்றுக்கும் இருக்கிறதா என்பதை அறிய நிலநூல் ஆராய்ச்சி வல்லுநர்க்கு விட்டுவிட்டாலும், 2500-க்கு தொலைவிற்குத் தொடர்பாகவுள்ள நீர்ப்பரப்பை ஒருவன் எங்ஙனம் ஊடுருவி வர முடியுமென்பதை யாவது இத்தகைய புராணப் புளுகுகளை நம்பும் அன்பர்கள் ஆராய்ந்து பாராமல் இருப்பது பெரிதும் வருந்தத் தக்கதும் இரங்கத் தக்கதுமாகவே இருக்கிறது. தண்ணீரில் மிதந்துசெல்வது அதவாது நீந்திச் செல்வதில் பழக்கமுள்ளவர்கள் கூட ஐந்து அல்லது பத்துக்கல் தொலைவான நீர்ப்பரப்பைத் தானும் கடக்க முடியாது. தண்ணீரில் நீந்திச் செல்வதிலோ அன்றி அதனுள் மூழ்கிச் செல்வதிலோ மிகவுந்திறமை வாய்ந்தவர்கள் தங்கள் கனவிலும் எண்ணமுடியாத ஒரு பெருந்தொலைவை, அத்துறையில் ஒரு சிறிதும் பழக்கமோ பயிற்சியோ இல்லாத திருநாவுக்கரசர் செய்து முடித்தார் என்பது வியப்பினும் வியப்பாகவன்றோ இருக்கிறது. இத்தகைய ஒரு அண்டப்புளுகை இந்து மதம் போன்ற மதநூல்களிலன்றி வேறெங்கேனும் காண முடியுமா? தமிழ் மக்களை இந்துமதமென்னும் படுகுழியில் வீழ்த்தி அவர்களைத் தங்கள் அடிமைகளாக ஆக்குவதற்கு ஆரியர்களே புனைந்து வைத்த இத்தகைய கதைகளை இனிமேலாவது ஆராய்ச்சிக்கண் கொண்டு நோக்கி இயற்கை வழி நடக்க முயல்வது இனித் தமிழ்மக்கள் கடைப்பிடியாய்க் கொளற் பாலதொன்றாம்.

இனி, அக்கதையில், தமிழ்மக்கள் தங்கள், கருத்தைச் செலுத்திப் பார்க்க வேண்டியதொன்றுண்டு. அதாவது, திருநாவுக்கரசர் அசையமுடியாது களைப்புற்றுக் கிடந்த இடத்திற்கு வந்து அவருடன் உரையாடியவர், திருநாவுக்கரசரை நோக்கி, “நீர் உமது உடம்பிலுள்ள உறுப்புக்கள் எல்லாம் அழிந்து போக வருத்தத்தோடும் இந்தக் கொடிய காட்டில் எதன் பொருட்டாக வந்தீர்” என்று வினவியதாகவும், அதற்குத் திருநாவுக்கரசர், “நமது கடவுளாகிய சிவபெருமான் வடகைலையிலே பார்வதி அம்மையாரோடு வீற்றிருக்கும் காட்சியைக் கண்டு களிக்க விரும்பி வந்தேன்” என்று விடை பகர்ந்ததாகவும், அதற்கு அவர் “தேவர்களாலும் அடையப் படுவதற்கு அரிதாகிய திருக்கைலாயத்தை மக்களால் அடையப் படுவது ஆகக்கூடிய காரியமா? நீர் இந்தக்கொடுஞ் சுரத்தில் வந்து என் செய்தீர்? இனி நீர் திரும்பிவிடுதலே நலம்” என்று கூறியதாக வும்; திருநாவுக்கரசர் திருக்கைலாய மலையில் வீற்றிருக்கின்ற சிவபெருமானைக் கண்டன்றித் திரும்பேன்” என்று கூறி மறுத்த தாகவும்; திருநாவுக்கரசரின் உறுதிப்பாட்டையும் விடாப் பிடியையும் துணிவையுங்கண்ட அந்தப் பேர்வழி (ஆள்வடிவில் வந்ததாகச் சொல்லப்படும் சிவன்) மறைந்து நின்று, “நாவுக் கரசனே எழுந்திரு” என்ற உடனே திருநாவுக்கரசர் அழிந்த உறுப்புக்கள் எல்லாம் முன்போல நிரம்பப்பெற்று அழகிய வடிவோடும் எழுந்து, “சுவாமி, தேவரீர் திருக்கைலாய மலை யில் எழுந்தருளியிருக்கின்ற வடிவத்தைக் கண்டு வணங்க அருள் செய்யும்” என்று வேண்டிக்கொண்டதாகவும்; அதற்கு அவர் (சிவன்) ‘நீ இந்தத் தடாகத்திலே முழுகித் திருவையாற்றிலுள்ள குளத்திலே கிளம்பிக், கைலாயமலையில் வீற்றிருந்தபடி காணப்படும் நமது காட்சியை அந்த இடத்திலே கண்டு வணங்கு” என்று கூறியதாகவும் பெரிய புராணத்திற் காணப்படு கின்றது. திருநாவுக்கரசர் கதையின் பிற்பகுதியாகிய இந்த இடம்தான் பெரிதும் ஆராய்ச்சிக்குரியதாய் இருப்பதோடு தமிழ் மக்கள் கருத்தூன்றிப் பார்க்க வேண்டியதாகவும் இருக்கிறது.

இந்து மதத்தின் ஒரு பிரிவாகிய சைவமதத்திற்குத் தலைவர் கள், திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரர் மாணிக்க வாசகர் என நால்வர் என்று சைவநூல்கள் நுவல்கின்றன. எனவே, இந்நால்வரும் திருநாவுக்கரசர் ஒரு தமிழன் என்பதும் மற்றைய மூவரும் பார்ப்பனர் என்பதும் நினைவில் வைக்கப்பட்டு, நாம் கூறும் உண்மைகளை ஆராய வேண்டியது தமிழ்மக்கள் கடனாகும். திருநாவுக்கரசர் காலம் இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்டதாய் இருத்தல் வேண்டுமென்பது ஆராய்ச்சியாற் புலனாகின்றது. ஆரியர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து நிலைபெற்றுத் தங்கள் முழு ‘ஆதிக்கத்தையும் செலுத்தத் தொடங்கிய காலம் இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டதாய் இருத்தல் வேண்டு மென்பதும் ஆராய்ச்சியாளர் கண்ட முடிபாகும். எனவே, திருநாவுக்கரசர் தோன்றிய காலம் ஆரிய மதமாகிய இந்துமதம் தமிழ் நாட்டில் வேரூன்றி நிலை பெற்ற காலமாகும். அக்காலத்தில் பிறந்த தமிழ் மகனாகிய திருநாவுக்கரசரும் இந்து மதத்தின் ஒரு பிரிவாகிய சைவமதக் கொள்கைகளையே பெரிதும் பின்பற்றி ஒழுகி வந்தாராயினும், அவர் இளமையிலே கல்வி பயின்று அறிவு நிரம்பப் பெற்று இருந்தவராதலின், அவருக்கு ஆரிய மதமாகிய சைவமதத்தில் உண்மை எதுவும் இல்லை என்பது புலப்பட்டது.

ஆரியர்களால் உண்டாக்கப்பட்ட சைவமதமானது பார்ப்பனரின் பிழைப்புக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு பொய்மத மென்று உணர்ந்த திருநாவுக்கரசர், அதனை வெறுத்துச், சமணமதத்தைத் தழுவி அம்மத நூல்களிலே பெரும் புலமை வாய்ந்து, தருமசேனர் என்ற சிறப்புப் பெயருடன் சமணர்களிற் றலைசிறந்து விளங்கினார். திருநாவுக்கரசரின் அறிவு நுட்பத்தை யும், அவர் சைவமதத்தை வெறுத்துச் சமண மதத்தைத் தழுவியதையுங்கண்ட இந்துமதப் பார்ப்பனர்கள், தங்கள் பிழைப்புக்கு மண்போட ஒரு தமிழன் தோன்றிவிட்டானே; இவனை எப்படியாவது நம் வயப்படுத்த வேண்டும், இல்லையேல் இவனைத் தொலைத்துவிட வேண்டும் என்று கருதியவர்களாய்ப் பல சூழ்ச்சிகள் செய்து, மீண்டும் அவர் சைவமதத்தைத் தழுவும்படி செய்தார்கள். ஆயினும், நமது தமிழ் வீரனாகிய திருநாவுக்கரசர் ஆரியர்களின் கொடுமைக்கஞ்சிச் சைவ மதத்தில் இருப்பதாகக் காட்டிக்கொண்டாரே யன்றி உண்மையான சைவப்பற்று அவருக்கு உண்டாகவில்லை. பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் ஏவப்பட்ட திருநாவுக்கரசரின் தமக்கையாராகிய திலகவதியாரை மகிழ்விக்கும் பொருட் டாகவே அவர் தம்மை ஒருசைவனாகக் காட்டிக் கொண்டார். திருநாவுக்கரசரின் தாய் தந்தையர் இறந்தபின், அவருடைய உறவினர் ஒருவரும் இன்மையால், அவரைத் திடீரென்று வெறுப்பது தகாதென்று கருதிய திருநாவுக்கரசர், தமது தமக்கையார் சொற்படி, தாம் ஒரு சைவனென்று பிறர் கருதும்படி தம்முடைய வெளிநடத்தையாற் காண்பித்தார். சூழ்ச்சியிற் கைதேர்ந்த பார்ப்பனர் திருநாவுக்கரசரின் உளப்பான்மையை எப்படியோ அறிந்து, அவருக்கு எந்தவகையிலாவது சைவத்தில் உண்மையான பற்றுதலும் நம்பிக்கையும் உண்டாக்குதல் வேண்டுமென்று கருதி, தங்கள் மரபிற் பிறந்த பார்ப்பனச் சிறுவனாகிய திருஞானசம்பந்தர் என்பார் சீர்காழியில் இருக்கிறார் என்றும், அவர் தமது மூன்றாம் ஆண்டிலேயே சிவ பெருமானை நேரிற்கண்டு, மனைவியாராகிய உமை யம்மையின் முலைப்பாலை உண்டு அவர் அருள் விளையாட்டுப் புரிந்துகொண்டிருக்கிறார் என்றும், அவரைப் பற்றி வானளாவப் புகழ்ந்து கூறினார்கள். இதனைக் கேட்ட திருநாவுக் கரசருக்கு அச்சிறுவனைப் போய்ப் பார்க்க வேண்டுமென்ற விருப்பமுண்டாகிச் சீர்காழிக்குச் சென்று அவரைக் கண்டார். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்றபடி, பார்ப்பனச் சிறுவனாகிய அந்தத் திருஞானசம்பந்தர், தம்மையும் தம்மினத் தவரையும் தமிழ்மக்களினின்றும் வேறுபிரித்துக் காண்பிக்கும் முறையில், திருநாவுக்கரசரைக் கண்டவுடனே, ‘அப்பரே உம் முடைய கடவுளைப் பாடும்’ என்று கூறினாராம். தமிழ்மக்களே, பாருங்கள் பார்ப்பனக் குறும்பை! மீன்குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமா? என்பார்களே; அதுபோலச் சம்பந்தர் ஒரு சிறுவனாய் இருந்தபோதிலும், தான் ஒரு பார்ப்பனன் என்பதும், அதற்கேற்பத் தான் வழிபடும் கடவுளும் வேறென்பதையுங் காட்டவே, நாவுக்கரசரை நோக்கி, “உம்முடைய கடவுளைப் பாடும்” என்று கேட்டார். அற்றேல் ‘உம்முடைய கடவுள் நம்முடைய கடவுள்’ என்ற பிரிவினை. எதற்காக அந்த இடத்தில் எழுந்த தென்பதனைத் தமிழ்மக்கள் ஊன்றிப்பார்த்தல் வேண்டும். சிவன் ஒரு பார்ப்பனக் கடவுள் என்பதற்கறிகுறியாகவே, இஞ்ஞான்றுங்கூடச் சிவன்கோயில்களில் நடைபெறும் வழிபாட்டு விழாக்காலங்களில் வடமொழிச் சொற்களாலேயே சிவவழிபாடு செய்தலும், வாழ்த்தொலிகள் கூறுதலும் நடை பெற்று வருகின்றன. தமிழ்மறை என்று சிலபோலித் தமிழரால் பறைசாற்றப்படும் தேவார – திருவாசகங்கட்குத் தினைத் துணை யேனும் மதிப்போ செல்வாக்கோ அந்தச்சிவன் கோயில்களிற் கிடையாது. பார்ப்பனர் வடமொழி மந்திரங்களால் வழிபாடு செய்து திருநீறு பெற்று வெளியே சென்ற பின்னர்தான், எச்சிற் சோற்றைக் காத்திருந்து உண்பார் போலத், தமிழ்மறையாகிய தேவாரம் ஓதப்படுகின்றது. இந்த அழகோவிய அமைப்பில், தேவார – திருவாசகங்களெல்லாம் சிவனால் அடியெடுத்துக் கொடுத்துப் பாடப்பட்டனவாம் என்றும் சில தமிழ்மக்கள் வெட்கமின்றிக் கூறித்திரிகின்றனர். உண்மையாகவே, சிவன் ஒரு தமிழ்க் கடவுளாயும், தேவார, திருவாசகங்களெல்லாம் அந்தக் கடவுளாலேயே அடியெடுத்துக் கொடுக்கப் பட்டனவாயும் இருந்தால், தமக்கும் தம்மை வழிபடும் தமிழ்மக்களுக்கும் விளங்காத வடமொழி மந்திரங்கட்கு முதலிடம் அளிப்பாரா என்பதனைத் தமிழ்மக்கள் இனிமேலாவது எண்ணிப்பார்த்து இவ்விந்துச் சூழலினின்றும் தப்பித்துத் தன்மானத்தோடுவாழ முயலவேண்டாமா?

இனித், திருநாவுக்கரசர் பல நாட்கள்வரை திருஞான சம்பந்தர் கூடவே இருந்து, அவர் செல்லும் இடங்களுக் கெல்லாம் அவருடன் சென்று இருந்ததுமாகிய சைவமதத்தில் ஏதாவது உண்மை இருக்கிறதா வென்று அறிய முயன்றார். ஆனால், அவர் திருஞானசம்பந்தரின் பல்லக்கைச் சுமந்ததைத் தவிர வேறுபயன் ஒன்றும் அடையவில்லை. பார்ப்பனக் கும்பலிற் சேர்ந்து சென்ற தமிழனாகிய திருநாவுக்கரசர், அவர்கள் இட்டபணியன்றி

வேறென்ன எதிர்பார்க்க முடியும்! அறிவிலும் ஆண்டிலும் முதிர்ந்த ஒரு தமிழன், மூன்றாண்டு நிரம்பப்பெறாத ஒரு பார்ப்பனச் சிறுவனுக்குப் பல்லக்குச் சுமந்தான் என்று எழுதியிருக்கும் புராணத்தைப் படிக்கும் எந்த உண்மைத் தமிழனுக்காவது குருதி கொதியாதிருக்குமா?

பர்ப்பானர்களின் தூண்டுதலின் பேரில் திருஞான சம்பந்தரைப் பார்க்கச் சென்ற திருநாவுக்கரசர் அவரை விட்டுப் பிரிந்து தனியாகப் பல கோயில்கட்குச் சென்று, இந்து மதத்தின் பேரால் அங்கங்கே நிகழுஞ் செயல்களைப் பார்த்து வந்தார். தமிழ்நாட்டிலே இந்துமதக் கொள்கைகளை நிலைநாட்டுவதன் வாயிலாகத் தமிழ்மக்களை இழிவுபடுத்துவதையே குறிக் கோளாகக் கொண்டு, பார்ப்பனர்களால் நடத்தப்பட்டுவரும் சிவன் கோயில்களில் நிகழும் கொடுமைகளைக் கண்ட திருநாவுக்கரசர், தமிழ்மக்களின் மானத்தைக் காப்பாற்றும் முறையில் பலசீர்திருத்தங்களைச் செய்ய முயன்றார். ஆனால், அவர் அடைந்த பயன் என்ன? திருத்தூங்கானை மாடம் என்னும் சிவன் கோயிலுக்கு அவர் சென்றிருந்தபோது, அங்கு தமிழ் மக்களை மிகவும் இழிவாக நடத்துவதைக் கண்டு, பார்ப்பனர் களின் அறியாமைக்காகப் பெரிதும் வருந்தி அவர்களைத் தம் அறிவுச் சுடர் கொண்டு திருத்த முயன்றார். அவர் இங்ஙனம் கூறியதைக் கண்ட அக்கோயிற் பார்ப்பனர்கள் வெகுண்டு ஒரு தமிழனாகிய சூத்திரப்பயலா எமக்கு அறிவுபுகட்ட வருவது’ என்று சீற்றங் கொண்டவர்களாய், அக்கோயிலிற் கிடந்த ஒரு சூலத்தை எடுத்து நெருப்பில் நன்றாகப் பழுக்கக் காய்ச்சித் திருநாவுக்கரசருடைய தோளிலே சுட்டார்கள். இந்நிகழ்ச்சி பெரிய புராணத்தில் உள்ளது. ஆனால், புராணப் புளுகர்கள் வழக்கமாகக் கையாளும் சூழ்ச்சி இந்நிகழ்ச்சியிலும் புகுந்து விட்டது. பார்ப்பனர்களால் திருநாவுக்கரசருக்கு ஏற்பட்ட இழிவை மறைத்து அதற்கு ஒரு கடவுட்டன்மை கற்பிக்கும் முறை யில், திருநாவுக்கரசர் சமணம் புக்கு மீண்ட தீட்டைப் போக்கு வதற்காகச் சிவனே தமது சூலத்தினால் திருநாவுக்கரசருடைய தோளில் ஒரு அடையாளத்தைப் பொறித்தார் என்ற புனை வுரையை மிகவும் திறமையாகப் புகுத்தி அதனை எல்லாரும் நம்பும்படியுஞ் செய்து விட்டனர். இன்றும் பகுத்தறிவுக் கொவ்வா அந்நிகழ்ச்சியை நம்பும் பேதைமையினோர் பலர் உளர். சிவன் என்ற பெயரால் வழங்கப்படும் அந்தப் பெருங் கடவுள், திருநாவுக்கரசருக்கு ஏற்பட்ட தீட்டைப் போக்குவதற்காகத் தம்முடைய சூலத்தால் அவருடைய தோளிலே ஒரு சூடு போட்டார் என்றால், அவரிடம் மதப்பித்தர்கள் கூறும் கடவுட்டன்மை சிறிதளவாவது இருக்கிறதாகக் கருத முடியுமா? மதநூல் இலக்கணப்படி, கடவுள் தமது திருநோக்கு ஒன்றினா லேயே அனைவருடைய மாசுகளையும் போக்கவல்ல ஆற்றல் படைத்தவர் என்றும், அவர் நினைத்த அளவிலேயே எல்லாக் காரியங்களையும் பிறருடையவும் பிறபொருள் களுடையவும் உதவி எதுவுமின்றித் தாமாகவே செய்து முடிக்கும் வன்மை பெற்றவர் என்றும் சொல்லப்படும் போது, ஈண்டுப் பேசப்படும் திருநாவுக்கரசரின் தீட்டைப் போக்குவதற்காகச் சிவன் தமது சூலத்தை எடுத்து அதனை நெருப்பிலே காய்ச்சித் ருநாவுக் கரசருடைய தோளிலே சுட்டார் என்பதை அறிவைப் பயன் படுத்திப் படிக்கும் எவரும் ஒப்புக்கொள்வரா? அன்றியும் மதம் விட்டு மதம் மாறும் மக்களுக்குத் தீட்டென்று சொல்லப்படும் ஒரு சிறுமை யாங்ஙனம் உண்டாகும்? பெண்களுக்குத் திங்களுக்கோர் முறை ஏற்படும் குருதிப் பெருக்கையும் தீட்டென்றே சொல்லுகிறார்கள். ஒரு மதத்தை ஒழித்துப் பிறிதொரு மதம்புகும் மக்களுக்கும் இத்தகைய தோற்றங்கள் யாதாயினும் உண்டாகின்றனவா என்று பார்த்தால், அப்படி எதுவும் ஏற்படுவதாகத் தெரியவில்லை. யாழ்ப்பாணம், திருநெல்வேலி முதலான ஊர்களிலுள்ள சைவர்கள் பலர் கிறித்துவ மதத்தைத் தழுவியிருக்கின்றனர். இவர்கள் இங்ஙனம் மதம்விட்டு மதம் புகுந்த காரணத்தால் அவர்களுக்கு ஏற்பட்ட தீட்டைப் போக்குவதற்காகக் கிறித்தவர் கடவுளான இயேசுவோ அல்லது பரமண்டிலங்களில் இருப்பதாகச் சொல்லப்படும் அவருடைய தந்தையோ (பிதாவோ) சிலுவை முதலான மதஅடையாளங் களால் யாதாயினும் சூடு போடுகின்றனரா? இல்லையே! ஆரியர்கள் தீங்கைச் செய்வதன் வாயிலாக இந்துக்களைத் தூய்மைப் படுத்தும் ஒரு பாசாங்கு போலவே, கிறித்தவக் குருமாரும் ‘ஞானஸ்நானம்’ என்ற பெயரால் ஏதோ செய்கின்றனர். இங்ஙனம் செய்வதால் முக்கிய மதத்தீட்டு நீங்கிவிட்டதாக அவர்கள் கருதிக் களிப்புறுகின்றனர். என்னே மடமை! திக்கை – ஞானஸ்நானம் முதலான மினுக்குவேலைகள் எல்லாம் மத ஆரியர்கள் தங்கள் மத வாணிகத்தை ஒழுங்காக நடத்துவதற்காகக் கையாளும் சூழ்ச்சிகளே, தீட்டென்று சொல்லப்படும் இக்கொடுமையான திட்டம் ஆரியமக்களால் கொண்டுவரப்பட்டுத் தமிழ்நாட்டிலே புகுத்தப்பட்ட ஒரு பொருளற்ற திட்டமென்பதே தமிழர் கொள்கையாகும். பிறப்பினால் உயர்வு தாழ்வு இல்லை என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டுள்ள தமிழ் மக்கள் முன்னிலையில், ஒருவன் ஒரு மதத்தை விட்டு இன்னொரு மதம் புகுவதால் தீட்டேற்படுகிற தென்றும், அதனைப் போக்குவதற்குத் தீக்கை-சூடு ஞானஸ்தானம் முதலான சடங்குகள் செய்ய வேண்டு மென்று கூறுவது எள்ளி நகையாடற்குரிய செய்தியேயாம். தீட்டு என்ற தமிழ்ச்சொல் துப்புரவின்மையைக் குறிக்கும் ஒரு சொல்லேயன்றி, மதாசிரியர்கள் கூற்றுப்படி மத மாறுதல்கள் முதலான காரியங்களைச் செய்வோர் தீட்டுப்பட்டவர்கள் என்பனவற்றிற்குப் பயன்படுத்தக் கூடிய சொல்லாக ஒருபோதும் ஆகாது. தீட்டென்று சொல்லப்படும் அழுக்கு அல்லது துப்புரவின்மையை குளித்தல் – முழுகுதல் – கழுவுதல் முதலான வற்றால் போக்க முடியுமேயன்றி நெருப்பிற் காச்சிய சூலத்தால் சுட்டு நீக்க முடியாது.

ஒன்றன் உண்மையை ஐயந்திரிபற அறிந்து கொள்ள வேண்டுமானால், அதற்குக் கருவியாகப் பொறுமை என்னுஞ் சிறந்த கொள்கையைக் கடைப்பிடித்தாலன்றி முடியா தென்பதனை நன்குணர்ந்த நாவுக்கரசர், இந்து மதத்தின் பேரால் தாம் அடைந்த இன்னலைப் பொறுத்துக்கொண்டு, இன்னும் பார்ப்பனர் செய்யுங் கொடுமைகளைப் பார்த்தறிய விரும்பிப் பின்னும் பல சிவன்கோவில்களுக்குச் சென்றார். திருச்சத்தி முற்றம் என்னும் கோயிலை அவர் அடைந்து பார்த்த போது, அங்கும் பார்ப்பனர் பல அடாத செயல்கள் செய்வதைக் கண்டு அவர்களைத் திருத்தமுயன்றார். அதனைக்கண்ட அவ்வூர்ப் பார்ப்பனர்கள் அவருக்கு நல்ல பாடம் கற்பிக்க எண்ணினார் களாயினும், அவர்களுக்கு அவ்வூரிற் போதிய செல்வாக்கு இல்லாமையினாலோ அல்லது வேறு காரணத்தாலோ அவரை ஒன்றுஞ் செய்யாது, ‘நீ நல்லூருக்கு வா, பார்த்துக் கொள்ளலாம்’ என்று சொல்லி விட்டு விட்டார்கள். பின் அவர் திருநல்லூர் என்னும் ஊரை அடைந்ததும், அங்கே அவரை நன்றாக நையப் புடைத்துத், தலையிலும் பிற இடங்களிலும் உதைத்து விரட்டி விட்டார்கள். இக் கொடுமைகளைக் கண்டு மனம்பொறாத நமது நாவுக்கரசர், “நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்… நனைந்தனைய திருவடி என்தலைமேல் வைத்தார்…” என்ற சொற்றொடர்கள் அமைந்த தேவாரத்தால் விளக்கியுள்ளார்.

ஆனால், நாம் மேலே எடுத்துக் காட்டிய ‘நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்’ என்ற சொற்றொடருக்குச் சைவ அன்பர்கள் கூறும் பொருள் ஒரு சிறிதும் அறிவுக்குப் பொருந்துவதாயில்லை. அதற்கவர்கள் கூறும் பொருள் இது: “கடவுளை நினைந்து உருகி வழிபடும் அடியார்களைத் துன்பங் களுக்கு ஆளாக்குவது சிவனுடைய இயல்பு” என்பதாகும். இக்கூற்றுக் கடவுள் நூலார் கொள்கையின்படியும், கடவுள் இலக்கணத்தைக்கூறும் மதநூல்களெல்லாம், கடவுளுக்கு எட்டுவிதமான குணங்கள் உண்டென்றும், அவ்வெட்டனுள், தாமாகவே எல்லாவற்றையும் உணரும் ஆற்றலுண்டு என்பதும், ஒன்றென்றும், கிடந்து கூறியுள்ளன. எனவே, கடவுள் தமது அடியார்களின் உளத்தூய்மையை அறிவதற்காகவும், அவர்கள், துன்பம் இன்பம் ஆகிய இருநிலைகளிலும் தங்கள் கொள்கை யினின்றும் ஒரு சிறிதும் மாறுபடார் என்பதற்காகவும் அவ்வடிய வர்கட்குத் துன்பத்ன நல்கி அதன் பின்னரே இன்பப்பேற்றை அளிக்கிறார் ஒரு கடவுள் என்றால், அந்தக் கடவுள் சிற்றறி வுடையவர்கள் என்று சொல்லப்படும் மக்களைக் காட்டிலும் எந்த வகையில் உயர்ந்தவர் என்பது எமக்கு விளங்கவில்லை. இயற்கை அறிவும், எல்லா வல்லமையும் அமைந்துள்ளதாகச் சொல்லப்படும் ஒரு கடவுள், தம்மை மெய்யன்போடு வழிபடும் அடியார் குழாங்களின் உண்மை நிலையை அறிவதன் பொருட்டாக அவர்களுக்கு மேலும்மேலும் துன்பத்தையே கொடுக்கிறார் என்பது ஒரு கேலிக் கூத்தேயாம். அற்றன்று, நீர் கூறுவது பொருந்தாது; கடவுள் தமது அடியவர்களைச் சோதிப்பதெல்லாம் தம்பொருட்டன்று; அடியவர்களின் அன்புப் பெருக்கையும் உறுதிப்பாட்டையும் உலகினர்க்குக் காட்டி அவர்களையும் அவ்வழிப்படுத்துதற் பொருட்டே இவ்வாறு திருவிளையாடல் புரிகின்றார் என்று கூறுவார் சிலர்க்கும் தக்க விடையிறுப்பாம். கடவுளைப் பார்க்கிலும் எல்லா வகையிலும் கீழ்நிலையிலுள்ள மக்கள், தங்களையொத்த ஒருவன் ஒரு குற்றத்தைச்செய்து விட்டால், அவனைத்திருத்தி நல்வழிப் படுத்துதற் பொருட்டு, அவன் புரிந்த குற்றத்தைப்பிறரும் செய்யாதிருக்கப் பலர் முன்னிலையில் அவனைத் தண்டித்து நல்வழிப்படுத்த முயல்கிறார்கள். இந்த முறையையே பேரறிவுப் பெரும் பொருளான கடவுளும் கையாளுகிறார் என்றால், அவருக்கும் பிறஉயிர்களுக்கும் உள்ள வேறுபாடுதான் யாதோ? யாம்அறிகிலேம். கடவுளை அறிந்த அல்லது கடவுள் என்ற ஒன்று உண்டென்ற கூற்றுக்கு நில்லா உரையை நம்பும் அன்பர்கள் தாம் இவ்வையப்பாடுகளை நீக்குதல் வேண்டும். கடவுட்டன்மை இது, மக்கட்டன்மை இது என்று பிரித்துக் காட்டி, கடவுளுக்கும் பிற உயிர்களுக்கும் உள்ள வேறுபாட்டையும் உயர்வு தாழ்வையும் விளக்கவேண்டும். அங்ஙனமன்றி, மக்கள் செய்கின்ற சிறுசிறு காரியங்களையே கடவுளுஞ் செய்கின்றார்; ஆதலால், கடவுள் மக்களைப் பார்க்கிலும் எந்தவகையில் உயர்ந்த வராவார் என்று கேட்கும் பகுத்தறிவாளன்மீது சீறி விழுவதும், கடவுள், எது வேண்டுமானாலும் செய்வார்; அவர் செயல்களில் தலையிடுவது மக்களாய்ப் பிறந்தோர்க்கு அடாது என்று தணிவு கூறுவதும் ஆகிய ஏமாற்றுதல்கள், கடவுட்டன்மை என்ற கண்மூடி வழக்கத்தை மண்மூடச்செய்து, கருத்தோடு வாழும் மக்கள் முன்னிலையில் செல்லாதென்பதை இனிமேலாவது உணர்ந்து மக்கட் பண்போடு வாழ முயல்வதே, மதமெனும் பேயால் பீடிக்கப்பட்டு மயங்கிக்கிடக்கும் மாந்தர்தம் செயலாம்.

மலடி மைந்தன் முயற்கொம்மை ஏணியாக அமைத்து வான் வெளியிலுள்ள மலரைப் பறித்து வந்தான் என்று ஒருவன் கூறும் கதையைப் போலத் தொடக்கமோ முடிவோ அற்ற ஒரு முழுமுதற் பொருளை மதநூல்கள் கூறும் வழியே சென்று அப்பெரும் பொருள் அளிக்கும் இன்பத்தைப் பெறலாம் என்று கூறுவது போன்ற அறியாமை பிறிதொன்றில்லை. மலடி மைந்தன் போன்றது கடவுள் முயற்கொம்பு போன்றது மதநூல்கள் கூறும் நெறி. வான் மலர் போன்றது கடவுள் அளிக்கும் பேரின்பம். இது காறும் கூறியவை கடவுளைப் பற்றிய சுருக்கமான விளக்கமாகும். இதிலும் தெளிவடைய மாட்டார்க்கு, விரும்பினால், பின்னும் தெளிவாக விளக்கப்படும். ஐயுறுவார் கடாவுக.

திருஞானசம்பந்தர் என்ற பார்ப்பனச் சிறுவனுக்கு அவனுடைய மூன்றாம் ஆண்டிலேயே, பரமசிவன் தமதருமை மனைவியாராகிய உமையம்மையாரோடு இடபத்தின்மீது ஏறிவந்து வான்வெளியிலே நின்றுகொண்டு சீர்காழியிலே ஒரு குளக்கரையிலே அழுதுகொண்டிருந்த அச்சம்பந்தரை உமையம்மைக்குச் சுட்டிக் காட்டி, “அதோபார் நமதருமைப் புதல்வன் பசியால் வாடி அழுதுகொண்டு நிற்கின்றான்; உனது முலைப்பாலை ஒருபொற்கிண்ணத்தில் கறந்து கொண்டு போய்க் கொடுத்து அவனுடைய பசியை ஆற்றி வா” என்று பரமசிவன் சொல்ல உமையம்மையும் அங்ஙனமே செய்ததாகப் பெரிய புராணம்கூறும் பல புதுமைகளில் ஒன்றாகிய இந்நிகழ்ச்சியைப் படித்த அல்லது கேட்ட ஒரு பகுத்தறிவாளன், இந்நிகழ்ச்சியை அப்படியே நம்பி மகிழும் ஒரு கடவுளன்பனை நோக்கி,அப்பனே! அரனடிமறவாத அன்பனே! சிவப்பழம்பெரும் பொருளைச் செம்மையாய் வழிபடும் சீலனே! சிவபெருமா னுடைய கட்டளையை மேற்கொண்ட உமையம்மையார் தமது முலைப்பாலைக் கறந்து அதனை ஒரு பொற்கிண்ணத்தில் பெய்து திருஞானசம்பந்தருக்குக் கொடுத்ததை நீர் நேரில் பார்த்தீரா?

அல்லது பெரிய புராணம் பாடிய சேக்கிழார்தான் பார்த்தாரா? அல்லது சேக்கிழார் பெரியபுராணம் பாடுவதற்குக் கருவியாக இருந்த கலித்துறைத் திருவந்தாதியைப் பாடிய நம்பியாண்டார் நம்பியாவது பார்த்தாரா? அல்லது நம்பியாண்டார் நம்பிக்குப் பெரிய புராணக் கதைகளைச் சொல்லியதாகச் சொல்லப்படும் திருநாரையூர்ப் பொல்லாப் பிள்ளையாராகிய கல்லுப் பிள்ளையார் தான் பார்த்ததா? என்று கேட்டால், “நீ ஒரு நாத்திகன்; உன் முகத்திலும் முழிக்கப்படாது; நீ கடவுள் இல்லை என்று சொல்லும் கூட்டத்தைச் சேர்ந்தவன்; ‘குடியரசு’ – விடுதலை – ‘பகுத்தறிவு’ படிப்பவன்போல் தெரிகிறது; உன்கேள்வி அடாவடியான கேள்வி; உனக்கு நான் விடைசொல்லப் போவதில்லை; அப்பாலே போ!” என்று சொல்லிவிடுகிறான் அந்தக் கடவுளன்பன்.

நான், நீர் சொல்லுகிறபடி, ஒரு நாத்திகன் என்பதும் உண்மையே. கடவுள் இல்லை என்று சொல்லும் கூட்டத்தைச் சேர்ந்தவன் என்பதும் உண்மையே. ‘குடி அரசு – விடுதலை பகுத்தறிவு, படிப்பவன் என்பதும் மறுக்கமுடியாத உண்மைதான். ஆனால், பகுத்தறிவுக்கும் இயற்கைக்கும் பொருத்தமான எதனையும் யார் சொன்னாலும், எந்தச் செய்தித்தாள் வெளி யிட்டாலும், எந்த நூலில் படித்தாலும் அவற்றை உளமுவந்து ஒப்புக்கொள்ளும் இயல்பும் உடையவன் என்பதையும், உம்மைப்போல், ‘ஆ, இவன் நாத்திகனா? இவன் முகத்தில் முழிக்கப்படாது. இவன் கடவுள் இல்லை என்று சொல்லும் கூட்டத்தைச் சார்ந்தவனா? இவனுடன் பேசவுங் கூடாது. இவன் குடியரசு படிப்பவனா? இவனோடு சேர்ந்தால் குடியே முழுகி விடும்” என்று எண்ணும் குறுகிய மனப்பான்மை உடையன் அல்லன் என்பதையும் உமக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். நிற்கச், சில நாட்களுக்குமுன், நான் காஞ்சியிலிருந்து புறப்பட்டுத், தேர்க்காலிற் பட்டிறந்த ஒரு பசுவின் கன்றுக்காக, அத்தேரை ஓட்டிச்சென்ற தன் புதல்வனை அத்தேர்க்காலிற் போட்டுக் கொன்ற சோழமன்னனுக்குக் காட்சி கொடுத்து, இறந்த கன்றையும், அரசமைந்தனையும் அமைச்சனையும் உயிர்பெற்று எழச் செய்ததாகப் பெரிய புராணத்திற் பேசப்படும் தியாகராயப் பெருமானாகிய சிவன் வாழும் திருவாரூருக்குப் போயிருந்தேன். அப்பொழுது, அப் பெருந்தகைத் தியாகராய சிவம் ஏறிவந்த தேர் அச்சுமுறிந்து தெருவிற் கிடைப்பதையும், அச்சுமுறிந்து தெருவில் கிடக்கும் அந்தத் தேருக்குள் தியாகராய சிவமும் கிடந்து துன்பப் படுவதையுங் கண்ட யான், அங்குள்ளவர்களை நோக்கி, இதென்ன காலவேற்றுமை! உலகிலுள்ள அனைவருடைய துன்பங்களையும் போக்கி அவர்களுக்கெல்லாம் நலமளிக்கும் நயனங்கள் மூன்றுடைய பெருந்தகைச்சிவம் இங்ஙனம் தனக்கேற்பட்ட இடரைக் களைய முடியாது தெருவிற்கிடந்து தவிப்பது ஏனோ என்று கேட்டேன். அதற்கவர்கள், எல்லாம் வல்ல எங்கள் சிவனுக்கு ஏற்பட்ட சீற்றமே தேரைச் சிதைந் தொடியும்படி செய்தது என்றார்கள். நான், அவர்களை மிகவும் பணிவுடன் நோக்கிச், சிவனுக்குச் சீற்றம்எப்படி உண்டாயிற்று? எதற்காக உண்டாயிற்று? யார் பேரில் சீற்றம்? இவ்வூரவர்கள் மீதா? இந்தியாவை நோக்கிப் படையெடுக்க முயற்சிக்கும் சப்பானியர்மீதா? இந்தியாவுக்குச் சுயராச்சியம் வழங்க மறுக்கும் ஆங்கிலர் மீதா? அல்லது இந்தியாவைத் துண்டாடிப் பிரிவினைகேட்கும் முஸ்லீம்களுக்கு ஆதரவாக நிற்கும் அன்பர் இராசகோபாலாச்சாரி மீதா? அன்றித், திராவிட நாட்டுப் பிரிவினைக்காகப் பெருங்கிளர்ச்சி செய்துவரும் எங்கள் தலைவர் இராமசாமிப் பெரியார் மீதா? ஒருவேளை, கடவுளே இல்லை என்று சொல்லும் எம்மனோர் மீதா? யார் மீது? எதற்காக? அந்தச் சிவனுக்குச் சீற்றம் ஏற்பட்டதென்பது தெரிந்தது? கடவுளை நீங்கள் நேரில் பார்த்தீர்களா. அல்லது கடவுள் தானாகவேவந்து எனக்கேற்பட்ட சீற்றங்காரணமாக நானே தேரச்சை முறியும்படி செய்தேன் என்று செப்பினாரா? அன்றி எழுத்து மூலமாய்த் தெரிவித்தாரா? என்பன போன்ற கேள்விகளைக் கேட்டேன், நான் இங்ஙனம் பேசியதைக் கண்ட அவ்வூர்க் கடவுளன்பர்கள், ஓகோ! நாம் என்னவோ என்றெண்ணினோம்; இவன் ஒரு வடிகட்டிய நாத்திகன்; இவனோடு பேசுவதை அந்தச் சிவன் அறிந்தால் இன்னும் பாக்கியுள்ள தேரச்சுகளையும் முறித்துவிடுவார்; ஆகையால் இவன் முகத்தில்கூட முழிக்கப் படாதென்று சொல்லிக் கொண்டே, மெதுவாக, ஒவ்வொருவராக என்னை விட்டு நழுவத்தொடங்கினார்கள். ஒருசிலர் மட்டும் என்னை முறைத்துப்பார்த்துக் கொண்டே நின்றார்கள். நான் அவர்களை நோக்கி ஐயன்மீரே! அரனடிதொழும் அன்பர் குழாங்களே! சீற்றத்தை ஒழிமின்! சிறிதே பகுத்தறிவைப் பயன்படுத்தி யான் கூறும் செய்திக்குச் செவிசாய்மின்! என்று பணிவான பீடிகையோடு பேசத் தொடங்கினேன். நான் இவ்வாறு பேசுவதைக் கேட்டால் மட்டும் என்னை நாத்திகன் என்கிறீர்களே! நான் கேட்கவில்லை, குடியரசு குறிக்கவில்லை, ஆனால், உங்கள் ‘தினமணி’ நான் கேட்கும் இந்தக் கேள்விகளையே கடந்த 21-5-42-இல் கேட்டிருக்கிறதே, அதற்கென்ன சொல்லுகிறீர்கள் என்றேன். நான் இங்ஙனம் கூறியதைக் கேட்டதும் ஒரு காங்கிரசன்பன் என்முன்னே வந்து, தினமணியாவது நாத்திகம் பேசுவதாவது, நீ கூறுவது சுத்தப்பொய் என்று என்மீது பொரிந்து விழுந்தார். நான் உடனே, என்னிடமிருந்த தினமணியை அவரிடம் கொடுத்து, நீரே படித்துப்பாரும் என்றேன். அவர் தினமணியை அதை மறந்துவிடு. இப்போது நான் மனமார நேசிக்கிறேன்.

“ஒரு தேசத்தை மற்றொரு தேசத்தார் ஆளுவதற்குக் கூறப்படும் விசித்திரமான காரணம். கடவுளின் சார்பாகத் தர்மகர்த்தாவாக இருந்து அந்தத் தேசத்தை ஆளுகிறார்களாம். கடவுளை எந்த இடத்தில் இவர்கள் சந்தித்தார்கள்; கடவுள் வாயினால் அதிகாரம் கொடுத்தாரா; அல்லது எழுத்து மூலமாகக் கொடுத்தாரா? என்ற விஷயங்கள் யாருக்கும் தெரியாது. இது இப்பொழுது நடை பெற்றுவரும் ஏமாற்று.”

என்று படித்ததும் அந்தக் காங்கிரசன்பர் ஒன்றும் பேசாமல் நடையைக் கட்டி விட்டார். இதுவும் கால வேற்றுமைதான் என்று மற்றும் அங்கு நின்றவர்கள் சொல்லிக்கொண்டே போனார்கள். இந்தத் தினமணிக்கு இப்படியுமா புத்தி தடுமாறும் என்று இயம்பிய வண்ணம் போயினர் ஒரு சிலர்.

அன்பர்களே! ‘தினமணி’ என்ற செய்தித்தாள் ஆரிய ஆதிக்கம் ஒன்றையே தனது குறிக்கோளாகக் கொண்டு வேலை செய்துவந்த போதிலும், அதன் ஆசிரியர் ஒரு தமிழனாய் இருப்பதால், தமிழ் மக்கள் செய்துவரும் பகுத்தறிவுக் கிளர்ச்சி யின் வேகம் எந்தத் தமிழனையும் தட்டி எழுப்பிவிடும்; அதனால், தமிழர்கள் என்றைக்காவது ஒருநாள் ஒன்றுபட்டுத் தன் மதிப்பியக்கத் தோழர்களாவார்கள் என்பதை அறிவுறுத்தவே, இந்து மதமும் தமிழரும் என்ற தலைப்பில் இச்செய்தியையும் நுழைத்தேன்.

திருநாவுக்கரசர், “நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்” என்ற சொற்றொடரை முதலடியாகக் கொண்டு பாடிய தேவாரத்தைத் “திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூரெம் பெருமானார் நல்லவாறே” என்று முடித்திருக்கிறார். இதில், பேரன்பும் பேரிரக்கமும் வாய்ந்ததாகப் பேசப்படும் ஒரு கடவுள், தன்னை மெய்யன்போடு வழிபடும் அடியவர்களை நையப்புடைத்தல், கடவுள் இலக்கணத்திற்கே மாறுபட்ட தென்பதை இதற்கு முன்னர் எழுதிய கட்டுரைகளில் நன்கு தெளிவுபடுத்தியுள்ளேன் எனவே, ‘திருவடி என் தலைமேல் வைத்தார்” என்ற சொற்றொடருக்கும் நேரானபொருள் என்ன வென்றால், திருநாவுக்கரசருடைய தலையில் கடவுள் தனது காலால் உதைத்தார் என்பதேயாகும். ஆனால், கடவுள் திருநாவுக் கரசரை உதைத்தார் என்ற உண்மையை வெளிப்படையாகச் சொல்லாமல், திருவடி தலைமேல் வைத்தார் என்று கூறியது மதத்தலைவர்கள் கையாளும் சூழ்ச்சிகளில் ஒன்று. இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்லித் தங்கள் பிழைப்புக்கு ஆதரவு தேடிக் கொள்பவர்கள் எல்லாரும் இத்தகைய நயவஞ்சக முறையையே கையாள்வது வழக்கம். கடவுள், திருநாவுக்கரசரை உதைத்தார் என்று சொல்லுவதற்கும், கடவுள் தனது திருவடியை அவர் தலை மேல் வைத்தார் என்று சொல்லுவதற்கும் உள்ள வேறுபாடு, ஒருவனைப் பார்த்து ‘இவன் மாடுபோல் இருக்கிறான்’ என்பதற்கும், ‘இவன் பசுப்போல் இருக்கிறான்’ என்பதற்கும் உள்ள வேறுபாட்டையே ஒத்திருக்கிறது. எங்ஙனம், ‘பசு’ என்றாலும் ‘மாடு’ என்றாலும் ஒரு பொருளையே குறிக்குமோ, அங்ஙனமே, திருவடி தலைமேல் வைப்பதும், உதைப்பதும் ஒரு பொருளையே குறிக்கும் என்க.

இனித், திருநாவுக்கரசர் தாம் பார்ப்பனரால் அடைந்த துன்பங்களை வெளிப்படையாகச் சொல்லாமல் இங்ஙனம் மறைபொருளாக வைத்துக் கூறியதற்கு செய்த துன்பத்தைப் பொறுத்து அவனுக்கு நன்மையையே செய்வதும், ஒருக்கால் அவன் செய்த துன்பத்தைப் பிறர்க்கெடுத்துச் சொல்ல வேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டால், கேட்போர் உள்ளம் கொதிப் படையாமல் இருக்கும் முறையில் அந்நிகழ்ச்சியை அமைதிதரும் சொற்களால் அழகாகக் கூறி அதன் அடிப்படைப் பொருளை விளங்கவைப்பதும் தமிழ் மக்களுக்கு இயற்கையாகப் படிந்த குணங்களில் ஒன்றாகும். எனவே, திருநாவுக்கரசர் ஒரு உண்மைத் தமிழனாய் இருந்தமையால், தான் பார்ப்பனரால் அடைந்த துன்பங்கள் தன்னை மட்டும் பொறுத்ததாய் இல்லாமல், தன்னையொத்த தமிழ்மக்களையும் அத்துன்பங்கள் வருத்தி வதைக்கும் என்பதை நன்கறிந்தவராகையால், அவற்றைத் தன்னைமட்டும் குறித்தவை என்றெண்ணிப் பொறுத்துக் கொள்ளாமல், எல்லாத் தமிழ்மக்களும் பார்ப்பனக் கொடுமை களை உணர்தல் பெரிதும் இன்றியமையாததென்று கருதிய நிலையில் இங்ஙனம் மறைபொருளாக வைத்துக் கூறியுள்ளார்.

 

“ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய்” என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது நாவுக்கரசர் கூறியுள்ளார். ஆரியன் வேறு; தமிழன் வேறு என்ற கொள்கை தோன்றி ஆயிர மாண்டுகள் கழிந்தும், இன்றும் அதன் உண்மையை நம்மவர் உணரமுடியவில்லை என்றால், அதற்குக் காரணம்: நம்மையும் ஆரியரையும் ஒன்றாய்ப் பிணைத்துக் கொண் டிருக்கும் இவ்விந்து மதமே என்பதை எவர்தான் மறுக்கமுடியும்? இந்து மதத்தின் பேரால் எழுதப்பட்ட புராண இதிகாசங்களன்றோ ஆரியர்களைப் பூசுரராக்கித் தமிழ்மக்களை அவர்களுக்கு அடிமைகளாக்கி விட்டன! இந்துமதத்தின் பேரால் உண்டாக்கப்பட்ட சட்ட மன்றோ, ஒரு பார்ப்பனன் ஒருவனைக் கொலை செய்தால் அப்பார்ப்பனனுடைய தலையை மொட்டையடித்தால் போது மென்றும், ஒரு தமிழன் ஒருவனைக் கொன்றுவிட்டால் அத் தமிழனைக் கொன்றுவிட வேண்டுமென்றும் கூறிக் குலத்துக் கொரு நீதி வகுத்துள்ளது! இந்து மதமன்றோ, தமிழனான திருநாவுக்கரசரை ஒருகூலிக்காரன் நிலையில் வைத்து அவர் கையில் புற்பூண்டுகள் செதுக்கும் ஒரு உழவாரத்தைத் தாங்கும் படி செய்தது! இந்துமதமன்றோ, பார்ப்பனனான திருஞான சம்பந்தரை ஒரு சிற்றரசன் நிலையில் வைத்து அவன் பல்லக் கேறும்படி செய்தது? எனவே, ஆண்டிலும் அறிவிலும் முதிர்ந்த நாவுக்கரசர் பார்ப்பனரால் உதையுண்டதற்குக் காரணம், அவர் இந்து மதமாகிய சைவசமயத்தைத் தழுவியிருந்தமையே என்பதை ஈண்டுக்கூறாமல் இருக்க முடியவில்லை. இன்றும்கூட, அறிவாற்றலிற் சிறந்து விளங்கும் தமிழ் மக்களிற் பலர், ஆரியர்களின் அடிமைகளாக இருப்பதோடு, தாங்கள் சற்சூத்திரர் என்ற ஆரியக் கூற்றையும் ஒப்புக்கொண்டிருப்பது கண்கூடு.

இனித், திருநாவுக்கரசர் தாம் பார்ப்பனரால் அடைந்த துன்பங்களை வெளிப்படையாகக் கூற முடியாமற் போனதற்கு இன்னொரு காரணம் என்னவென்றால், அந்தக் காலத்தில் அன்பையும் அறிவையும் வளர்த்த சமணம், புத்தம் ஆகிய மதங்களை ஆரியர்கள் தங்கள் சூழ்ச்சியால் ஒழித்துக், கொலையும் கொடுமையும் நிறைந்த இந்துமதத்தைத் தமிழ் நாட்டில் பரப்பி அம்மதத்தையே அக்காலத் தமிழ்வேந்தரும் பின்பற்றும்படி செய்தமையேயாகும். ‘அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி’ என்றபடி, அக்கால அரசரின் ஆதரவையும் செல் வாக்கையும் பெற்றிருந்த ஆரியப்பார்ப்பனர்; தங்கள் இந்துமதக் கொள்கைக்கு மாறாக நடப்பவர்களைத் தண்டிப்பதில் முழு உரிமைபெற்றவர்களாய் இருந்தார்கள். எனவே, ஆரியப் பார்ப்பனரின் கொடுமைகளைக் கண்டு அவர்களைத் திருத்த முயன்ற திருநாவுக்கரசரைப் பார்ப்பனர் தங்கள் மனம்போல் உதைக்கவும் அடிக்கவும் ஏற்பட்டது வியப்பல்ல.

இனித், திருநாவுக்கரசருக்கு ஏற்பட்ட துன்பங்கள் பார்ப்பனரால் ஏற்பட்டதல்ல வென்றும், சிவனே திருநாவுக் கரசரைத் தூய்மையாக்குவதன் பொருட்டுத் தம்முடைய திருவடியை அவர் தலைமேல் வைத்தார் என்றும் மக்கள் நம்பவேண்டுமென்பதற்காகவே கதையை இங்ஙனம் மாற்றி எழுதிவைத்தார்கள். அதோடு, திருநாவுக்கரசரைக் கொண்டே அதுகுறித்த பதிகமும் பாடும்படி செய்துவிட்டனர் அந்தப் பார்ப்பனர். என்றாலும், உண்மை நிகழ்ச்சி இதுவென்பதைக் காட்டாதொழிதல் ஒரு உண்மைத் தமிழனுக்கு முறையாகா தென்று எண்ணிய நாவுக்கரசர், பார்ப்பனர் தமக்குச் செய்த கொடுமைகளை இலைமறை காயாக அத்தேவாரப் பதிகத்தில் புகுத்தியுள்ளார். அரசன் ஆணைக்கும், ஆரியரின் கொடுமைக்கும் அஞ்சிய ஒரு தமிழன், தனது கொள்கைக்கு மாறாக நடக்குமாறு கட்டாயப்படுத்திய போதிலும், உண்மைக்கு அழிவு உண்டாகாத முறையில் நடந்துகொண்டதற்காக நாவுக்கரசரை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.

(5/3, 26/4, 3/5, 10/5, 17/5, 31/5, 7-6-1942

அண்ணாவின் ‘நக்கீரன்’ என்ற புனைப் பெயரில் வந்தது)

அடித்தட்டு மக்களும் அரசு அதிகாரியானது எப்படி என்று அறிந்து கொள்ளுங்கள்…..

அடித்தட்டு மக்களும் அரசு அதிகாரியானது எப்படி என்று அறிந்து கொள்ளுங்கள்…..

அது 1972-ம் வருடம்
கலைஞர் இரண்டாம்முறை முதலமைச்சரான காலம்

அரசு அலுவலகங்கள் முழுதும் அவாக்கள் நிரம்பி வழிந்த நேரம்

அரசு வேலைக்கு,
TNPSC என ஒன்றிருப்பது கூட OBC,BC,SC மாணவர்கள் அறியாத காலமது….

பொதுப்பணித்துறை அலுவலகத்தை மாதிரிக்கு எடுத்துக் கொள்வோமானால்,

அதன் செயற்பொறியாளர் வெங்கட்ராமன்
டிவிஷனல் அக்கௌன்ட்டன்ட் சேஷாத்திரி, சூப்பிரண்டண்ட் ஸ்ரீனிவாசன்,
ஹெட்கிளார்க் ராமானுஜன், கிளார்க் பரந்தாமன்

இப்படிப்போகும் லிஸ்ட்
கடை நிலை ஊழியர் என்னும் பியூன்
ஒரு தங்கராசு,சுப்ரமணி
இப்படி ஒரு பெயரில் இருப்பதுவே பெரிய விஷயம்

பொ.ப.து -லேயே இந்த நிலை என்றால்
மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டுக்குள் வரும் வருவாய்த்துறை ஏனைய பத்திரப்பதிவு,கல்வித்துறை வாகனப்போக்குவரத்து, வணிகவரித்துறை
இவைகளைப்பற்றி சொல்லத்தேவையில்லை..
கல்விப்பின்புலமில்லாத குடும்பங்களிலிருந்து
புதிதாக பட்டப்படிப்பு
முடித்து வரும் OBC,BC,SC கிராமப்புற மாணவர்ளுக்கு போதிய வழிகாட்டுதலோ, பயிற்சியோ இல்லாத காரணத்தால்

இந்த அரசு பணிகளுக்கான TNPSC நடத்தும் போட்டித்தேர்வில் வென்று உத்தியோகத்தைபிடிப்பது குதிரைக்கொம்பான விஷயம்..

இதை மனதில் கொண்டு
1972-ம் வருடம்,
படித்து முடித்து வேலையில்லா பட்டதாரிகளுக்கு இளைஞரணி(Youth corps) என்னும் ஒரு திட்டத்தை கலைஞர் அறிவிக்கிறார்..

அதன் வழி மாதம் 175 ரூபாய் உதவித்தொகை நிர்ணயிக்கபட்டு
மாவட்ட ஆட்சியரால் OBC,BC,SC
பட்டதாரிகளிடம் விண்ணப்பம் கோரபட்டு
மெரிட் மற்றும் சமூக நீதி அடிப்படையில் பட்டதாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு,

அந்தந்த மாவட்டத்தில் உள்ள
அரசு அலுவலகங்களில்
கௌரவ உதவியாளரராக நியமிக்கப்பட்டனர்

அதோடு நின்றிருந்தால்
கலைஞர் மற்ற தலைவர்களிலிருந்து வேறுபட்டு சரித்திரம் போற்றும் தலைவராகி இருக்கமாட்டார்

இந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பட்டதாரி இளைஞரணியினர்
அந்தந்த வருட TNPSC போட்டித்தேர்வில் கலந்து கொள்ள, அவர்களுக்கு முன்கூட்டிய அனுபவம் மற்றும் உத்தியோகத்திற்கென
தனி மதிப்பெண்கள் வழங்கி அவர்கள் அனைவரும் TNPSC-யால்
தேர்ந்தெடுக்கப்பட்டு
அனைத்து அரசு அலுவலகங்களிலும்
Group iv, Group ii, Group i என அனைத்து பதவிகளிலும் அமர வைக்கப்பட்டனர்

அதிலிருந்து உடைந்ததுதான் அவாக்களின் அரசு அலுவலக ஆதிக்கமும் மேதாவித்தனமும்

அதன் பின்னரே அடிதட்டிலிருந்து குப்பனும் சுப்பனும் அரசு அதிகாரிகளானது

கலைஞரை விமர்சிக்கும் இக்கால அரைவேக்காடுகளுக்கு
நலிந்த சமூகத்தினரின் முன்னேற்றத்திற்கான
அவரின்
தொலைநோக்குப்
பார்வையும்,
சமூக நீதி அக்கறையும் அந்த அவாகளுக்கும், அவர்களை அண்டி பிழைப்போருக்கும்
புரிய வாய்ப்பில்லை.

கலைஞர் என்னும் சகாப்தம்
ஒடுக்கி வைக்கப்பட்ட பல தலைமுறைகளை
வாழ்க்கை செழிக்க வைத்திருக்கிறது….

பார்பனீய லாபி க்கு கலைஞர் சொருகின ஆப்பு… இன்னும் கருணாநிதியின்னு கதறிட்டிருக்கானுங்க…

திரு என்றோ, கலைஞர் என்றோ, முன்னாள் முதலமைச்சர் என குறிப்பிடாமல், கருணாநிதி சொல்லி அரிப்பை தீத்துக்குறானுக…

தமிழர்களின் சகாப்தம் தலைவர்
#கலைஞர்
🙏🙏

ஜனவரி 25 – மொழிப்போர் தியாகிகள் தினம்!

ஜனவரி 25 – மொழிப்போர் தியாகிகள் தினம்!

https://www.facebook.com/photo.php?fbid=606504296072212&set=a.138126339576679&type=3
இந்தித் திணிப்புக்கு எதிராக நடந்த போராட்டங்களை மொழிப்போர் என்கிறோம். அந்த மொழிப்போரைப் பற்றி கடந்த காலங்களில் பல பதிவுகள் வந்துள்ளன. அவற்றில் மூன்று பதிவுகள் முக்கியமானவை:

1. தமிழன் தொடுத்த போர் – மா. இளஞ்செழியன்.
2. என்று முடியும் இந்த மொழிப்போர்? – அ. இராமசாமி
3. இந்தி ஏகாதிபத்தியம் – ஆலடி அருணா

மேலே இருக்கும் மூன்று முக்கியமான புத்தகங்களிலும் மொழிப்போர் தியாகிகள் வரிசையில் நடராசனின் பெயரைத்தான் முதலில் குறிப்பிடுகிறார்கள். அதன்பிறகே தாளமுத்துவின் பெயரைக் குறிப்பிடுகிறார்கள். காரணம், நடராசன்தான் முதலில் உயிர்நீத்தவர். ஆகவே, அவரைத்தான் முதல் தியாகி என்கிறார்கள்.

ஜனவரி 25 - மொழிப்போர் தியாகிகள் தினம்!

ஜனவரி 25 – மொழிப்போர் தியாகிகள் தினம்!

”நடராசன் முதலில் பிணமானார், அடுத்த பலி தாளமுத்து. அவர் ஆதி திராவிட மரபு. இவர் நாடார் சமுதாயம்” என்கிறார் இளஞ்செழியன்.

“இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முதல் பலியான நடராசன் ஆதி திராவிட சமுதாயத்தைச் சேர்ந்தவராவார்.” என்கிறார் அ. இராமசாமி.

“இந்தி எதிர்ப்புப் போரில் முதன்முதலில் உயிர் நீத்த உத்தமத் தியாகி திரு. நடராசனாவார். அவரை அடுத்து உயிர் நீத்த மாவீரன் தாளமுத்து ஆவார்” என்கிறார் ஆலடி அருணா.

மேலும், ”என்னைப் பொறுத்தவரை தோழர்கள் நடராசன், தாலமுத்து மரணத்தை என்னுடைய அண்ணன், தம்பி மரணம் என்றே கருதுகின்றேன்” என்று பேசியிருக்கிறார் அண்ணா.

நாவலர் நெடுஞ்செழியன் எழுதிய ”திராவிட இயக்க வரலாறு” புத்தகத்தில், “திரு. நடராசன் என்ற வீர இளைஞர் சிறைக்கொடுமையின் காரணமாக 1939 ஜனவரி 15 அன்று உயிர் நீத்தார். அவரையடுத்து திரு. தாளமுத்து என்ற இளைஞரும் சிறைக்கொடுமை தாங்காது 1939 மார்ச் 13ஆம் நாளன்று சிறைச்சாலையிலேயே இயற்கை எய்தினார்” என்று பதிவுசெய்திருக்கிறார்.

திராவிட இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசு எழுதிய ”நீதிக்கட்சி வரலாறு” புத்தகத்தில், ”இந்தி எதிர்ப்புப் போரில் முதல் முதலாக உயிர்நீத்தவர் நடராசன், இவரை அடுத்து தாலமுத்து உயிர் நீத்தார்” என்றே பதிவுசெய்யப்பட்டுள்ளது.

தமிழ்த்தேசியத்தை முன்னெடுக்கும் பழ. நெடுமாறன், தன்னுடைய “உருவாகாத இந்தியத் தேசியமும் உருவான இந்து பாசிசமும்” புத்தகத்தில் “மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நடராசனும், அதன்பின்னர் தாளமுத்துவும் முதல் களப்பலியாயினர்” என்று பதிவுசெய்திருக்கிறார்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் எழுதியுள்ள புத்தகம் ஒன்றில், “தமிழுக்காய் உயிர்தந்த முதல் தமிழன், ஒரு தலித் தோழன் என்பது குறிக்கத்தக்கது” என்று பதிவுசெய்திருக்கிறார்.

ஆக, மொழிப்போர் பற்றிய பதிவுகளில் நடராசனுக்கு உரிய முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அவர் தலித் என்பதால் அவர் புறக்கணிக்கப்படவோ, ஒதுக்கப்படவோ இல்லை. வரலாற்றுப் பதிவுகளில் இருந்து அவர் மறைக்கப்படவும் இல்லை, பின்னுக்குத் தள்ளப்படவும் இல்லை. நடராசனின் மரணத்தை யாரும் நினைவுகூராமலும் இருப்பதில்லை. ஆக, ’நடராசனின் பெயரை முதலில் சொல்வதற்கு மனமற்ற தமிழர்கள்’ என்று பொதுமைப்படுத்திட முடியாது.

{நான் எழுதிய திராவிட இயக்க வரலாறு முதல் பாகத்தில் நடராசன் – தாலமுத்து என்றொரு அத்தியாயம் இடம்பெற்றுள்ளது. மொழிப்போர்: இந்தித்திணிப்புக்கு எதிராகத் தமிழகம் திரண்ட வரலாறு என்ற புத்தகத்திலும் நடராசனின் தியாகத்தை முதன்மைப்படுத்தி எழுதியிருக்கிறேன் என்பது தகவலுக்காக.}

திமுகவின் 4-வது மாநில மாநாடு 1966 டிசம்பர் 29 தொடங்கி 1967 ஜனவரி 1-ம் தேதி வரை சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்றது

வரலாற்றில் இன்று!

திமுக முதன்முறையாக ஆட்சி பிடிக்க காரணமாக இருந்த மாநாடு நடைபெற்ற தினம் இன்று. திமுகவின் 4-வது மாநில மாநாடு 1966 டிசம்பர் 29 தொடங்கி 1967 ஜனவரி 1-ம் தேதி வரை சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்றது.

பரம்பரைக் கர்ணம், மணியம் பதவிகளை ஒழித்தது யார்?

From https://www.facebook.com/athi.asuran.7/posts/660343745378353

பரம்பரைக் கர்ணம், மணியம் பதவிகளை ஒழித்தது யார்? தோழர் பெரியாரின் உழைப்பையும், அண்ணா, கலைஞர் அரசுகளின் ஆணைகளையும் மறைத்து, வரலாற்றைத் திரிக்கிறார், தோழர் இரவிக்குமார் MP.
“கிராமங்களில் ஜாதி ஒழிய வேண்டுமென்றால், கணக்குப்பிள்ளை வேலையைப் பறையருக்குக் கொடுக்க வேண்டும். மணியம் வேலையை பள்ளர், சக்கிலியர், குறவர்களுக்குக் கொடுக்க வேண்டும். கணக்குப் பிள்ளையாகப் பார்ப்பானும், மணியமாக பிள்ளையும், கவுண்டரும் இருப்பதால்தான் அங்கே ஜாதி உரிமை தோன்றுகிறது. ஆகவே ஜாதி ஒழிப்புக்கு நாம் தூண்ட வேண்டும். பரிகாரம் தேட வேண்டும்” என்று அறிவிப்பு செய்தார்”. (விடுதலை 12.04.1964 & 16.04.1964)
பெரியாரின் கனவை அண்ணா நனவாக்கினார். கிராம நிர்வாகம் என்பதில் இருந்த பார்ப்பன, ஆதிக்க ஜாதிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

பரம்பரைக் கர்ணம், மணியம் பதவிகளை ஒழித்தது யார்?

பரம்பரைக் கர்ணம், மணியம் பதவிகளை ஒழித்தது யார்?

Tamil Nadu Proprietary Estates Village Service and the Tamil Nadu Hereditary Village-Offices (Repeal) Act, 1968 எனும் சட்டத்தை 1968 அக்டோபர் 16 அன்று பிறப்பித்தார். அந்தச் சட்டத்தைச் செயல்படுத்தியதில் எழுந்த சில சட்டச் சிக்கல்களை – அடுத்து வந்த கலைஞர் ஆட்சி Tamil Nadu Village Officers Service Rules, 1970 எனும் சட்டத்தால் சரி செய்தது.
எதிர்பார்த்தபடியே இச்சட்டங்களை எதிர்த்து ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. 1973 மற்றும் 1975 ஆம் ஆண்டுகளில் அந்தச் சட்டச் சிக்கல்களைச் சரி செய்வதற்காக கலைஞரின் தி.மு.க. அரசு புதிய புதிய அரசாணைகளைப் பிறப்பித்தது….விரிவாகப் படியுங்கள் – வேண்டும் மீண்டும் திராவிடர் ஆட்சி நூலில் உள்ள ஒரு தலைப்பு மட்டும் காட்டாறு தளத்தில் – https://kaattaaru.com/article.php?sl=2021zr12q28e551789u
#DMK4TN

கிராமங்களைப் பற்றி தோழர் பெரியார் பேசுவதைப் பாருங்கள்.

“கிராமங்கள்  பலவற்றால்  ஆகிய  ஒரு  நாட்டை  ஒருவன்  கைப்பற்றி  ஆட்சி  செய்யும்போது,  அவன் இந்தக்  கிராம  வாழ்க்கையின்  அமைப்பைச்  சீர்குலைக்காமல்,  மேலும்  பலமாக்கி  வைத்துத்  தன்  ஆட்சியை  நிலை  பெறுத்துவதற்குச்  சாதகம்  செய்து  கொண்டான்.

ஒவ்வொரு  கிராமத்திற்கும்  ஒரு  தலைவனை  ஏற்படுத்தி  அவன்  மூலம்  தனக்குத்  தேவையான  கப்பத்தை வாங்கிக்  கொண்டு தன் கட்டளைப்படி  நடந்து  தனக்குதவிபுரிபவர்களுக்கு  ஒவ்வொரு  கிராமத்திலும்  வரி  நீக்கப்பட்ட  விளைநிலங்களை ஊழிய  இனாமென்றும்,  தேவதாயம்,  பிரம்மதாயம்  என்றும்  சாமிக்கும்,  பூசாரிக்கும்,  பிராமணருக்கும்  கொடுத்து  இவர்களைத்  தன்  ஆட்சிக்கு  அரண்களாக்கிக்  கொண்டான்.

கிராம அமைப்பு  முடி  ஆட்சிக்கும்,  கொடுங்கோன்மைக்கும்  சாதகமான  அமைப்பு  என்பதைக்  கண்டதினால்,  பழைய  இந்து  அரசர்கள்  காலத்தில்  இருந்த  இவ்வமைப்புப்  பின்னால்  முகமதிய  அரசர்களாலும்,  அதற்குப்பின் வந்த கிருஸ்தவ (இங்கிலீஸ்)   அரசாங்கத்தாலும்,   அப்படியே   காப்பாற்றப்பட்டு  வருகிறது.  (பகுத்தறிவு இதழ். மே 1936)

இந்து மதம் திணித்த ஜாதிஅமைப்பை அப்படியே நிலை நிறுத்தவும், வலிமைப்படுத்தவும் இந்த கிராம அமைப்பு பயன்பட்டது என்றார் பெரியார்.

இப்படிப்பட்ட கிராமங்களுக்குத் தலைவர்களையும், நிர்வாகிகளையும் தேர்ந்தெடுக்கும் முறை ஒன்றை இராஜராஜசோழன் தொடங்கி வைத்தார். அது தான் “குடவோலை முறை”. குடவோலை முறைப்படி, ஒவ்வொரு கிராமத்தையும் நிர்வகிக்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பார்கள். இப்போது நடக்கும் பஞ்சாயத்து போர்டு தேர்தலைப் போன்றது அது.

ஒரு முக்கியமான வேறுபாடு என்னவென்றால், குடவோலை முறையில் பார்ப்பனர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும். அவர்களுக்கு மட்டுமே அந்தத் தகுதி இருப்பதாக மன்னர்களே அறிவித்தார்கள். பார்ப்பனர்கள் மட்டுமே கிராமங்களை நிர்வகிக்கும் உரிமை பெற்றவர்களாக இருந்தார்கள்.

 ஆங்கிலேய அரசாங்கம் வந்த பிறகு, குடவோலை முறை மறைந்தது. 1802, 1895- களில் கிராம அதிகாரிகள் சட்டம் இயற்றப் பட்டது. அந்தச் சட்டத்தின்படியும் பரம்பரை பரம்பரையாக கிராமங்களை நிர்வகித்தவர்கள் என்ற அடிப்படையில் பார்ப்பனர்களே கிராம அதிகாரிகளாக நீடித்து வந்தனர். பார்ப்பனர்கள் வசிக்காத பல கிராமங் களில் பெரும் நில உடமையாளர்களாக இருந்த, பார்ப்பனரல்லாத உயர்ஜாதியினர் கிராம அதிகாரிகளாக வரத் தொடங்கினர்.

தற்காலத்திலுள்ள வி.ஏ.ஓ.க்களுக்கு இணையான பதவி அது. கிராம முன்சீஃப், கர்ணம், மணியம் என பல பெயர்களில் இந்தப் பரம்பரைப் பதவிகள் இருந்தன. இந்தப் பரம்பரைக் கிராம அதிகாரி களிடம் தான் நமது இருப்பிடச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், நில உரிமைப் பதிவுக்குத் தேவையான அடிப்படை ஆவணங்கள், நிலங்களின் எல்லைகள் குறித்த தகவல்கள் போன்ற பல அடிப்படையான சான்றிதழ்களைப் பெறவேண்டும்.

திராவிடர் அரசுகள் எத்தனையோ வகுப்புரிமைச் சட்டங்களை இயற்றினாலும், கல்வி, வேலை வாய்ப்பு, விவசாய, நில உரிமைகள்  வழங்கப்பட்டாலும் அவற்றைப் பெறுவதற்கு இந்தச் சான்றிதழ்கள் மிகவும் முக்கியம். அந்தச் சான்றுகளை வழங்கும் உரிமை பார்ப்பனர் களிடமும், அந்தந்தக் கிராமங்களிலிருந்து ஆதிக்க ஜாதியினரிடமும் இருந்தது.

ஒரு பட்டியலின மாணவரோ, பிற்படுத்தப்பட்ட சமுதாயத் திலேயே எளிய ஜாதி மாணவரோ, அந்தக் கிராமத்தில் பெரும்பான்மை யாக இல்லாத ஜாதி மாணவரோ அல்லது விவசாய, நில உரிமைகளைப் பெற விரும்பும் மக்களோ மேற்கண்ட ஆதிக்கவாதிகளிடம் சான்றிதழ் களைப் பெறுவதென்பது கனவிலும் நடக்காததாக இருந்தது.

நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்த கதையாக நமது உரிமைகள், ஏட்டில் இருந்தன. நடைமுறைக்கு வருவதில் பெரும் தடை இருந்தது. மக்கள் விடுதலையில் அக்கறையுள்ள – சமுதாயத்தை நன்கு அறிந்து வைத்துள்ள ஒரு அரசு மட்டுமே இதை நுணுக்கமாகப் புரிந்துகொண்டு எதிர்வினையாற்ற முடியும்.

தோழர் பெரியார் நீண்ட காலமாகவும், அந்த நேரத்திலும்,

கிராமங்களில் ஜாதி ஒழிய வேண்டுமென்றால், கணக்குப்பிள்ளை வேலையைப் பறையருக்குக் கொடுக்க வேண்டும். மணியம் வேலையை பள்ளர், சக்கிலியர், குறவர்களுக்குக் கொடுக்க வேண்டும். கணக்குப் பிள்ளையாகப் பார்ப்பானும், மணியமாக பிள்ளையும், கவுண்டரும் இருப்பதால்தான் அங்கே ஜாதி உரிமை தோன்றுகிறது. ஆகவே ஜாதி ஒழிப்புக்கு நாம் தூண்ட வேண்டும். பரிகாரம் தேட வேண்டும்” என்று அறிவிப்பு செய்தார். (விடுதலை 12.04.1964 & 16.04.1964)

என்றார். பெரியாரின் கனவை அண்ணா நனவாக்கினார். கிராம நிர்வாகம் என்பதில் இருந்த பார்ப்பன, ஆதிக்க ஜாதிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

Tamil Nadu Proprietary Estates Village Service and the Tamil Nadu Hereditary Village-Offices (Repeal) Act, 1968 எனும் சட்டத்தை 1968 அக்டோபர் 16 அன்று பிறப்பித்தார்.

அந்தச் சட்டத்தைச் செயல்படுத்தியதில் எழுந்த சில சட்டச் சிக்கல்களை – அடுத்து வந்த கலைஞர் ஆட்சி Tamil Nadu Village Officers Service Rules, 1970 எனும் சட்டத்தால் சரி செய்தது.

எதிர்பார்த்தபடியே இச்சட்டங்களை எதிர்த்து ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. 1973 மற்றும் 1975 ஆம் ஆண்டுகளில் அந்தச் சட்டச் சிக்கல்களைச் சரி செய்வதற்காக கலைஞரின் தி.மு.க. அரசு புதிய புதிய அரசாணைகளைப் பிறப்பித்தது.

கிராம அதிகாரி, கர்ணம்போன்ற எந்தப் பதவியாக இருந்தாலும் அவற்றுக்கு அரசு சார்பில் பொதுத்தேர்வு நடத்தப்படும். அதில் தேர்வாகும் எந்த ஜாதியினர் வேண்டுமானாலும் எந்தக் கிராமத்திற்கு வேண்டுமானாலும் கிராம நிர்வாக அதிகாரிகளாக நியமிக்கப்படலாம் என்ற நிலை உருவானது.

பஞ்சமிநிலக் கொள்ளைக்கு உடந்தையான பார்ப்பனர் மற்றும் கர்ணங்கள்மிராசுதார்கள்

ஆங்கிலேயர் காலத்தில் அரசுக்குச் சொந்தமாக இருந்த புறம் போக்கு நிலங்களில் விவசாயம் செய்து கொள்ள யார் வேண்டு மானாலும் விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிப்பவர்களுக்கு நிலம் கிடைக்க வேண்டுமானால், அந்தப் புறம்போக்கு நிலங்கள் இருக்கும் கிராமங்களில் உள்ள ஆதிக்க ஜாதிகளைச் சேர்ந்த இந்தக் கர்ணம், மணியம், முன்ஃப்புகளின் ஒப்புதல் வேண்டும். அவர்கள் மறுத்தால் யாருக்கும் நிலம் கிடைக்காது.

பார்ப்பனர்களோ, பெரும் நில உடமையாளர்களோ, நிலமே இல்லாத ஆதிக்க ஜாதியைச் சேர்ந்தவரோ யாராக இருந்தாலும், பட்டியலின மக்களுக்கோ, அந்தந்தக் கிராமங்களில் எண்ணிக்கை குறைவாக வாழும் ஜாதியினருக்கோ நில உரிமை கிடைப்பதை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்.

அதனால் தான், ஆங்கிலேயர் காலம் முதல் நீதிக்கட்சி காலம் வரை பட்டியலின மக்களுக்கு 12 இலட்சம் ஏக்கர் நிலங்கள் வழங்கப் பட்டன. (Depressed Classes Land Act G.O. No 1010/10-A (Revenue) 1892) அப்படி வழங்கப்பட்ட நிலங்களில் இன்று சுமார் 10 இலட்சம் ஏக்கர் நிலங்களைப் பட்டியலின மக்களிடமிருந்து இடைநிலை ஜாதியினர் பறித்துக் கொண்டனர்.

இந்து மதத்தின் ஜாதிமுறை என்பது சமுதாயத்தின் அனைத்துத் தளங்களிலும் ஆதிக்கத்தைச் செலுத்துவதை நாம் அறிவோம். பஞ்சமி நில அபகரிப்புக்குப் பின்னாலும் இந்து பார்ப்பன, ஜாதித்தத்துவங்களே இருக்கின்றன. அவை கிராம முன்ஃப், கர்ணம், மணியம் போன்றவர் களின் வழியாக பஞ்சமி நிலக் கொள்ளையை நடத்தின.

அப்படிப்பட்ட இந்து மத, ஜாதிமுறைப் பாதுகாப்புப் பதவி களைத்தான் அண்ணாவும், கலைஞரும் அதிரடியாகக் கலைத்தனர். ஒருவேளை இத்தகைய சட்டங்கள் பஞ்சமி நிலங்கள் வழங்கப்பட்ட காலத்திலேயே நிறைவேற்றப்பட்டிருக்குமானால் இத்தனை இலட்சம் ஏக்கர் நிலங்கள் பட்டியலின மக்களிடமிருந்து பறிபோயிருக்காது.

ஜாதியச் சமுதாயம் மீது நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதல்

பரம்பரைப் பதவிகளுக்கு எதிராக பொதுத்தேர்வுகள் வழியாக கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு செய்யப்படும் முறை உருவாக்கப் பட்ட, அதே காலகட்டத்தில், தமிழ்நாட்டு அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீடு சதவீதமும் 49 ஆக உயர்த்தப்பட்டது.

இதுபோன்ற தொடர்ச்சியான சட்டரீதியான கூட்டு நடவடிக்கை களும், இந்தச் சட்டங்களுக்கு ஆதரவாகப் பெரியார் திரட்டிக்கொடுத்த சமுதாய ஆதரவும் தமிழ்நாட்டு கிராமங்களில் நிலவிய கடுமையான பார்ப்பன, பார்ப்பனிய, இடைநிலை ஜாதிகளின் ஆதிக்கங்களின் மீது துல்லியத் தாக்குதல்களை நடத்தின.

– அதிஅசுரன், வேண்டும் மீண்டும் திராவிடர் ஆட்சி நூல்

 

திராவிட கட்சிகள் தமிழ்நாட்டை அழிச்சிட்டாங்களா?… காமராஜருக்கு பிறகு தமிழ்நாடு வளரவில்லையா?… மறைக்கப்பட்ட உண்மைகள்…!!!

திராவிட கட்சிகள் தமிழ்நாட்டை அழிச்சிட்டாங்களா?… காமராஜருக்கு பிறகு தமிழ்நாடு வளரவில்லையா?… மறைக்கப்பட்ட உண்மைகள்…!!!

Raja Sir Panaganti Ramarayaningar Panagal Arasar Dec 16

Remembrance Day: 16th December.
Raja Sir Panaganti Ramarayaningar (Panagal Arasar / Raja of Panagal) served as a Chief Minister of Madras 11 July 1921 – 3 December 1926

1. The King of Panagal (Panagal Arasar) provided communal representation in education and employment to non-Brahmins.

2. He gave women the right to vote in Tamil Nadu as early as 1921.

3. He had established a “Students’ Selection Board” in each college for admissions of non-Brahmin students. This board played a pivotal role in instilling the right to education of the Scheduled Castes and Backward Castes.

4. He had formed the Hindu Religious Endowment Board and converted the temples, which were the hunting ground of the Brahmins, for the use of the people.

5. He abolished the rule that medical education aspirants must have known Sanskrit for admission to medical colleges. The Dravidians rose to prominence in medical education only after the abolition of the barbaric rule of Brahmins, which was similar to nowadays NEET exam.

6. He donated his land to build the medical college in Chennai. That college was named Kilpauk Medical College.

7. He abolished the dominance of Brahmins and Britishers in the medical field. He enacted a law for providing medical education to Scheduled Castes and Backward Castes students.

8. Until about 40 years after founding the University of Madras, Tamil was not taught as a subject. In 1927, he expelled the Brahmins responsible for such activity from the University Committee, increased the number of non-Brahmin faculties, and introduced Tamil as a subject.

#TNCM #panagalarasar #ChiefMinister #sanskrit #tamil #UniversityofMadras #MadrasUniversity #Dec16 #history #kingofPanagal #JusticeParty #PanagalArasar

 

கலைஞர் கருணாநிதி முஸ்லிம் சமுதாயத்தின் துரோகியா ?

நன்றி : https://www.facebook.com/100001290865462/posts/1808634649189546/?d=n

கலைஞரின் உடல்நிலை குறித்து வழக்கம் போல நேற்றும் பல வதந்திகள். சங்கி மங்கிகள் போலி தமிழ் தேசியவாதிகளின் சந்தோசமான பதிவுகள். இதில் கலைஞரை எதிரியாக துரோகியாக சித்தரித்து சில இஸ்லாமிய இளைஞர்களின் பதிவுகள்.
இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தேர்தல் காலங்களில் திமுக ஆதரவு நிலை எடுக்கும்போது திமுகவை இஸ்லாமியர்களின் பாதுகாவலனாக சித்தரிக்கும், எதிர் கூட்டணியில் இருக்கும் போது ” கலைஞர் சட்டமன்றத்திலேயே இஸ்லாமியர்களை தீவிரவாதிகள்னு சொன்னதாகவும் 1997 ல் நிகழ்ந்த கோவை படுகொலையை குறிப்பிட்டு கருணாநிதி அவர்கள் முஸ்லிம் சமுதாயத்திற்கு துரோகம் இழைத்து விட்டதாகவும் குண்டுவெடிப்பை தொடர்ந்து ஒவ்வொரு முஸ்லிம் வீடுகளிலும் சோதனை நடத்தியதாகவும் பாஜக வுடன் கூட்டணி அமைத்ததையும் கூறி குற்றம்சாட்டுவது வாடிக்கை .
இதை அடிப்படையாக கொண்டதுதான் அந்த இளைஞர்களின் திமுக எதிர்ப்பு ..
இந்த குற்றச்சாட்டுக்கள் உண்மையா என்பதை அந்தக்கால அரசியல் சமூக சூழலுடன் பார்த்து, எங்கு தவறு நடந்தது என்பதையும் சுயபரிசோதனை செய்து இளையதலைமுறைக்கு வெளிப்படையாக தெரியப்படுத்தும்போது, அடுத்த தலைமுறையாவது எமது தவறுகளில் இருந்து பாடம் கற்று, , தம்முடைய நடவடிக்கைகளால் தமது சமுதாயம் மேற்கொண்டு பாதிக்காமல் பார்த்துக் கொள்ளும் .இதுதான் சரியான வழியென்று நான் நினைக்கிறேன். . இதைவிட்டுவிட்டு பொறுப்பை தட்டிக்கழித்து தவறுகளை அடுத்தவன் மீது சுமத்துவது சமுதாயத்தை வைத்து பிழைக்கும் அயோக்கியனின் வேலை.
உண்மையில் கலைஞர் இஸ்லாமியர்களுக்கு துரோகம் செய்தாரா அல்லது சில இஸ்லாமியர்கள் கலைஞருக்கு துரோகம் செய்தார்களா ? காவிப் பண்டாரங்களை தமிழகத்தில் கால்பதிக்க விடமாட்டேன் என்று பாஜக வை கடுமையாக எதிர்த்து வந்த கலைஞரை பாஜக வுடன் கூட்டணி அமைக்கும் அளவுக்கு அவரை தள்ளியது யார் ?
திமுக ஆட்சிக்கு வந்தபோது இருந்த சூழ்நிலைய பார்ப்போம்.—
1989 இல் ஆட்சிக்கு வந்த திமுக, சென்னையில் வைத்து விடுதலைப்புலிகள் பத்மநாபா உள்ளிட்ட சுமார் 9 பேர்களை சுட்டுக் கொன்றதை அடுத்து விடுதலைப்புலிகளை காரணம் காட்டி அன்றைய ஆளும் சந்திரசேகர் அரசு திமுக ஆட்சியை வெறும் ஒன்றரை ஆண்டுகளிலேயே கலைத்தது .
இதைத்தொடர்ந்து, 1991 இல் நடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, விடுதலைப்புலிகளால் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். திமுக தான் இந்த கொலையை செய்ததாக தமிழகம் முழுதும் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டது. அந்த தேர்தலில் அதிமுக காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெற, துறைமுகம் சேப்பாக்கம் என இரண்டு இடங்களைத்தவிர மற்றதில் திமுக படுதோல்வியடன்தது…
அன்று அசுர பலத்துடன் ஆட்சியில் இருந்த ஜெயலலிதா மீது பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும், அந்த ஆட்சி முஸ்லிம் சமுதாய விரோதமாகத்தான் இருந்தது. பாபர் மசூதி இடிப்பிற்கு ஆதரவான செங்கல் ஊர்வலம். தேசிய ஒருமைப்பாடு முதலமைச்சர்கள் கூட்டத்தில் கரசேவைக்கு ஜெயலலிதாவின் பகிரங்க ஆதரவு. ராமர்கோவிலுக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்தில் அதிமுகவின் 2 எம்பிக்கள் 24 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டது போன்ற சங்பரிவார் ஆதரவு ஆட்சியாகவே அன்றைய அதிமுக ஆட்சி இருந்தது. மேலும் 1992 ல் பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து கோவை கோட்டைமேடு மற்றும் மேலப்பாளையத்தில் துப்பாக்கிச்சூடு. நடத்தியது. இதில் மேலப்பாளையத்தில் உயிர்பலியும் ஏற்பட்டது.
1993 நவம்பரில் கோவையில் பாஷா பாய் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மறுபடியும் கோவை கோட்டைமேடு பகுதிக்குள் போலீசார் புகுந்து வெறியாட்டமாடி முஸ்லிம்களின் சொத்துக்களை சூறையாடியதோடு நூற்றுக்கணக்கான இளைஞர்களை சிறையில் அடைத்தது. கோவை சென்னையில் சுமார் 40 முஸ்லிம் இளைஞர்கள் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள். கோட்டைமேடு பகுதியை சுற்றி ஐந்து இடங்களில் செக்போஸ்ட் அமைத்து முஸ்லிம்களை திறந்தவெளி சிறையில் அடைத்தார்கள்.
இந்த சம்பவத்தை தொடர்ந்துதான் இந்துத்துவா இயக்கங்களுக்கு எதிரான பதிலடி நடவடிக்கைகள் ஆரம்பித்தது. நாகூர் கலவரமும் எஸ்எம் பாக்கர் ஜெஎஸ் ரிபாயி போன்ற தலைவர்கள் வெடிகுண்டு வழக்கு தடா வழக்கில் கைது செய்யப்பட்டார்கள். இதற்கு எதிராக போராடத்தான் 1995 இல் தமுமுக ஆரம்பிக்கப்பட்டது.. முதல் போராட்டமே தடா சட்ட எதிர்ப்பு போராட்டம் தான்…
அன்றைய ஜெயலலிதா ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆளும் அதிமுக அரசும் சங்பரிவார் கும்பலும் கூட்டாகத்தான் செயல்பட்ட அரசியல் சமூக சூழலில் தான், 1996 ல் நடந்த தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. ஜெயலலிதா கூட வெற்றி பெறவில்லை.
1996 – 2001 வரையிலான இந்த திமுக ஆட்சி காலத்தில் தான், திமுக சட்டமன்றத்திலேயே முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று சொன்னதாகவும், முஸ்லிம்களுக்கு துரோகமிழைத்த தாகவும், பாஜக வுடன் கூட்டணி அமைத்ததாகவும் குற்றம்சாட்டுவார்கள்…
இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து பேசுவதற்கு முன்னாள், திமுக வின் 1996 மே- 1996 டிசம்பர் 6 வரையிலான முதல் ஆறுமாத கால ஆட்சியில், இஸ்லாமியர்களில் அரசியல் முதிர்ச்சியற்ற ஒரு சிறுகூட்டம் என்ன நடவடிக்கையில் ஈடுபட்டது என்பதை பார்ப்போமா ?
1996 மே மாதம் நடந்த தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு இரவு திமுக முன்னணியில் உள்ளது என்ற செய்தி வானொலியில் வந்து கொண்டிருந்த போதே கோவை கோட்டைமேடு என்எச் ரோடு முஸ்லிம் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த ஐந்து போலீஸ் செக்போஸ்ட்டுகள் ஒரு கும்பலால் சூறையாடப்பட்டு இரண்டு பொலிசாருக்கு அருவாள் வெட்டு விழுந்தது திமுக வெற்றியை இப்படித்தான் கொண்டாடினார்கள் நம்ம அருமை மக்கள் .
1996 திமுக ஆட்சி தொடங்கிய இரண்டு மாதத்திலேயே சென்னையை மையமாக வைத்து முஸ்லிம்களுக்கு சொந்தமான
30.7.96 அன்று பிராட்வேயில் உள்ள லைட் ஆப் ஆசியா ஹோட்டலில் நபிகள் நாயகத்தின் முடியை வைத்து ஒரு கண்காட்சி நடத்தியதாலும்,
27.9.1996-ல் எக்மோர் இம்பீரியல் ஹோட்டலில் டேன்ஸ் பார் நடத்தி வந்ததாலும்
25.10.1996-ல் மண்ணடி லக்கி ஹோட்டலில் பார் நடத்தியதாலும் இந்த மூன்று இடங்களில் குண்டு வைக்கப்பட்டது. .இந்த குண்டுவெடிப்புகளில் சிலருக்கு காயம் ஏற்பட்டது .
இந்த வழக்குகளில் ஒரு முக்கிய அமைப்பில் அன்றும் இன்றும் நிர்வாகியாக இருக்கும் கொடுங்கையூர் நசூருதீன் என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டவர் என்பதை கவனிக்க வேண்டும்.
1996ல் கோவை பெட்ரோல் குண்டு வீசி பூபாலன் கொலை
26.10.1996 அன்று அண்ணன் பத்வா கொடுத்து அனுப்பியவர்களால் நாகூர் ஆலிம் ஜார்ஜ் வீட்டில் கொலை நடந்தது .
அதே 1996 நவம்பரில் உத்தமபாளையத்தில் பீஜே பேசியதற்கு பின்பு ஏற்பட்ட சலசலப்பை தொடர்ந்து ஆறுமுகம் என்பவர் கொலை.
1996 டிச 6 ல் பாபர் மசூதியை மீட்கக்கோரி கவர்னர் மாளிகை முற்றுகையிட்டு தொழுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. அடுத்த எந்த வருடமும் இப்படி போராடவில்லை.
இன்று அதே இயக்கமும், அதிலிருந்து பிரிந்து போன இயக்கங்களும் தடையை மீறி தொழுகை நடத்தும் அளவுக்கு அமைப்பு ரீதியாக இன்னும் வலிமையானதாக இருக்கிறது. ஆனால் அதே போன்ற ஒரு போராட்டத்தை இன்று அறிவிப்பார்களா ?
ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்தில் திமுக அரசுக்கு கடுமையான நெருக்கடி கொடுத்தது யார் ? தமது முதிர்ச்சியற்ற நடவடிக்கைகள் மூலம் திமுக அரசினை பலகீனப்படுத்தியது யார் ? வலுவான திராவிட கட்சிகளின் அரசியல் தான் தமிழக சமூக நீதிக்கும் மதநல்லிணக்கத்துக்கும் பாதுகாப்பானது என்பதை புரிந்து கொள்ளாமல் பொறுப்பற்ற முறையில் அவர்களுக்கு நெருக்கடி கொடுத்தது யார் ?
இதுவரை சொல்லியதெல்லாம் ஆட்சிக்கு வந்த முதல் ஆறு மாதத்தில் நடந்தவை. 97,98 ல் நடந்தது வேற லெவல்..
1997 1998 அந்த சிறுகூட்டம் எத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டது ? இதையெல்லாம் தூண்டிவிட்டவர்கள் இன்று எந்த நிலையில் இருக்கிறார்கள் ?